துப்புரவுப் பணிக்கான நிறுவனங்களின் செலவில் பாதியை அரசாங்கம் வழங்கும்

துப்புரவுப் பணிக்கான நிறுவனங்களின் செலவில் பாதியை அரசாங்கம் வழங்கும்

1 mins read
2d5f784d-f190-4685-bf4b-f85ed5738d44
ஃபெங்ஷானில் உள்ள புளோக் ஒன்றின் கீழ்த்தளத்தை மார்ச் 24ஆம் தேதி சுத்தப்படுத்திய ஊழியர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டுள்ள நபர்களுடன் தொடர்புடைய இடங்களை நிபுணத்துவ சேவைகளைப் பயன்படுத்தி சுத்தம் செய்வதற்காக நிறுவனங்களுக்கு ஏற்படும் செலவில் பாதியை அரசாங்கத்தின் புதிய திட்டம் ஒன்று வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் இம்மாதம் 1ஆம் தேதியிலிருந்து டிசம்பர் 31ஆம் தேதி வரை நடப்பில் இருக்கும் என்று தேசிய சுற்றுப்புற வாரியம், என்டர்பிரைஸ் சிங்கப்பூர், சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் ஆகியவை இணைந்து வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

வீடுகள், அலுவலகங்கள், உணவகங்கள், ஹோட்டல்கள், சுற்றுலாத் தளங்கள் என எல்லா வகை இடங்களுக்கும் இந்தப் புதிய திட்டம் பொருந்தும்.

கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட இடங்களை ரசாயனம் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் என்றும் அதற்கான செலவு அதிகம் என்றும் தேசிய சுற்றுப்புற வாரியம், என்டர்பிரைஸ் சிங்கப்பூர், சிங்கப்பூர் பயணத்துறை கழகம் தெரிவித்தன.

எனவே அந்தச் செலவில் 50% தொகை மானியமாக வழங்கப்படும். அதிகபட்சமாக $3,000 வரை இந்த மானியம் வழங்கப்படும்.

சுற்றுப் பயணத்துறை தொடர்பான அமைப்புகளில் அத்தகைய துப்புரவுப் பணிகளுக்கு அதிகபட்சமாக $20,000 வரை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

சம்பந்தப்பட்ட அமைப்புகளின் இணையப்பக்கம் வழியாக விண்ணப்பம் செய்து தொகையைப் பெறலாம்.

குறிப்புச் சொற்கள்