கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒன்றாக கட்டுமானத் துறையில் பணியாற்றும் வேலை அனுமதிச்சீட்டு, எஸ்-பாஸ் ஊழியர்கள் அனைவரும் நாளை மறுநாள் அதாவது ஏப்ரல் 20ஆம் தேதியில் இருந்து மே 4ஆம் தேதி வரை வீட்டிலேயே இருப்பதற்கான உத்தரவை மனிதவள அமைச்சு பிறப்பித்து இருக்கிறது.
சார்ந்திருப்போர் அனுமதி அட்டையில் இருக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் இந்த உத்தரவு பொருந்தும்.
அவர்கள் எந்த இடத்தில் வசித்தாலும் அவ்விடத்தைவிட்டு அடுத்த இரு வாரங்களுக்கு வெளியே செல்லக்கூடாது.
தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஊழியர் தங்கும் விடுதி அல்லது வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிச் சட்டம் 2015ன்கீழ் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியாக வரையறுக்கப்பட்ட இடங்களில் வசிப்போருக்கு இந்த உத்தரவு பொருந்தாது.
கட்டுமானத் துறையில் பணியாற்றுவோரிடையே கிருமித்தொற்று பரவல் அதிகரித்திருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

