சமூக தனிமைப்படுத்தல் வசதிகளுக்காக இந்தோனீசியாவிலிருந்து மெத்தை, கட்டில், தலையணை வரவழைப்பு

சமூக தனிமைப்படுத்தல் வசதிகளுக்காக இந்தோனீசியாவிலிருந்து மெத்தை, கட்டில், தலையணை வரவழைப்பு

1 mins read
acd7a0a7-ad61-4aba-86e9-66d53946c677
முதல் தொகுதி படுக்கை பொருட்கள் இன்று சிங்கப்பூருக்கு வந்து சேர்ந்தன. படம்: தெமாசெக் அறநிறுவனத்தின் ஃபேஸ்புக் பக்கம் -

சிங்கப்பூர் எக்ஸ்போ போன்ற கொவிட்-19 சமூக தனிமைப்படுத்தல் வசதிகளுக்காக இந்தோனீசியாவிலிருந்து ஏறக்குறைய 4,500 படுக்கை பொருட்கள் வர வழைக்கப்பட்டுள்ளன.

இதற்காக சிங்கப்பூரில் உள்ள இந்தோனீசியத் தூதரகத்துடன் இணைந்து பணியாற்றியதாக தெமாசெக் அறக்கட்டளை தெரிவித்தது.

கட்டில், மெத்தை, மெத்தை உறைகள், படுக்கை விரிப்புகள், தலையணைகள், தலையணை உறைகள், போர்வைகள் இதில் அடங்கும்.

செவ்வாய்கிழமை நிலவரப்படி கிருமித்தொற்றுள்ள, ஆனால் உடல்நிலை சீராகவுள்ள 4,682 பேர் சமூக இடங்களில் தனிமைப்படுத்தப்பட்டு பராமரிக்கப்படுவதாக சுகாதார அமைச்சு கூறியது.

குறிப்புச் சொற்கள்