ஆடவர் ஒருவர் படிக்கட்டு கைப்பிடியில் தொங்குவதைக் காட்டும் காணொளி ஒன்று இணையத்தில் வலம் வருகிறது. அந்தக் காணொளி சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்டது அல்ல என சிங்கப்பூர் போலிஸ் படை இன்று (ஏப்ரல் 28) தெரிவித்தது.
குறுந்தகவல் செயலிகளில் அந்தக் காணொளி பகிரப்பட்டதாக போலிஸ் தெரிவித்தது.
உண்மையில்லாதவற்றைப் பரப்ப வேண்டாம் என்று பொதுமக்களைக் கேட்டுக்கொண்ட போலிஸ், அந்தக் காணொளியைப் பரப்ப வேண்டாம் என்றும் அது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டது.
சுமார் 35 வினாடிகளுக்கு ஓடக்கூடிய அந்தக் காணொளி ஃபேஸ்புக்கில் பதிவேற்றப்பட்டு, அதில், துவாசில் உள்ள ஊழியர் தங்கும் விடுதியில் ஒரு வெளிநாட்டு ஆடவர் தூக்கிட்டுக்கொண்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
வேலையும் பணமும் இல்லாததால் அந்த ஆடவர் செவ்வாய்க்கிழமை காலையில் உயிரை மாய்த்துக்கொண்டதாக அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

