'அறிகுறிகள் உள்ள ஊழியர்கள் உடனே தனிமைப்படுத்தப்பட்டு, பரிசோதனை'

'அறிகுறிகள் உள்ள ஊழியர்கள் உடனே தனிமைப்படுத்தப்பட்டு, பரிசோதனை'

2 mins read
6300fc5c-5644-42e2-a2ab-cb632b098778
இதர ஊழியர்களுக்கு கிருமி பரவாமல் இருப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக சுகாதார அமைச்சின் மருத்துவ சேவைகளின் இயக்குநர் இணைப் பேராசிரியர் கென்னத் மாக் நேற்று தெரிவித்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு அதிகம் வாய்ப்புள்ள தங்கும் விடுதிகளில் ஊழியர்களுக்கு அறிகுறிகள் தென்பட்டவுடனே அவர்கள் தனிமைப்படுத்தப்படுவர் என்று சுகாதார அமைச்சு நேற்று (ஏப்ரல் 28) தெரிவித்தது.

இதர ஊழியர்களுக்கு கிருமி பரவாமல் இருப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக சுகாதார அமைச்சின் மருத்துவ சேவைகளின் இயக்குநர் இணைப் பேராசிரியர் கென்னத் மாக் நேற்று தெரிவித்தார்.

"அனைத்து ஊழியர்களுக்கும் கிருமித் தொற்று சோதனை நடத்தியாக வேண்டும். ஆனால் கிருமித் தொற்று விகிதம் அதிகமுள்ள தங்கும் விடுதிகளில் அறிகுறிகள் உள்ளவர்கள் தனிமைப்படுத்தப் படுவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும்," என்றார்.

கிருமித் தொற்று விகிதத்தைப் பொறுத்து பல்வேறு தங்கும் விடுதி களில் தடுப்பு உத்திகள் மாறுபடும் என்று குறிப்பிட்ட பேராசிரியர் மாக், கொரோனா கிருமிப் பரவும் சங்கிலித் தொடரைத் தடுப்பதற்கு அறிகுறிகள் உள்ள நபர்களை தனிமைப் படுத்துவதே சிறந்த வழி என்றார்.

"சில தங்கும் விடுதிகளில் நோய் அறிகுறிகளுடன் வரும் ஒவ்வொரு ஊழியருக்கும் கிருமித் தொற்று இருப்பது சோதனையில் உறுதி செய்யப்படுகிறது.

"இத்தகைய இடங்களில் கிருமித்தொற்று பரவும் சாத்தியம் அதிகம்.

"இதனால் ஒரே அறையில் வசிக்கும் மற்ற ஊழியர்களுக்கு கிருமி பரவாமல் தடுக்க அறிகுறிகள் உள்ள ஊழியர்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்படுகின்றனர்.

"அப்போதுதான் கிருமி பரவும் சங்கிலித் தொடரை முறியடிக்க முடியும்," என்று அவர் மேலும் விளக்கமளித்தார்.

நோய் அறிகுறிகள் தென்படும் பெரும்பாலான ஊழியர்கள் நலமுடன் இருப்பதையும் அவர்களிடம் அறிகுறிகள் மிதமான அளவில் இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இத்தகைய ஊழியர்கள் முதலில் தனிமைப்படுத்தப்பட்டு அணுக்கமாகக் கண்காணிக்கப்படுகின்றனர்.

பின்னர் சோதனை மூலம் அவர்களுக்கு கிருமித் தொற்று இருக்கிறதா என்பது உறுதி செய்யப் படுவதாக நேற்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இணைப் பேராசிரியர் கென்னத் மாக் தெரி வித்தார்.

குறிப்புச் சொற்கள்