இம்மாதம் 26ஆம் தேதி முதல் மேம்படுத்தப்பட்ட முகக்கவசங்களைக் குடியிருப்பாளர்கள் பெற்றுக்கொள்ளலாம். அடுத்த மாதம் 14ஆம் தேதி வரை இந்த முகக்கவசங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
மீண்டும் பயன்படுத்தக்கூடிய இந்த முகக்கவசங்கள் அணிவதற்கு மேலும் சௌகரியமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவு முழுவதும் உள்ள 109 சமூக மன்றங்களிலும் 661 வசிப்போர் குழு நிலையங்களிலும் இந்த முகக்கவசங்களைப் பெற்றுக்கொள்ளலாம். முகக்கவசங்களை விநியோகம் செய்யும் இயந்திரங்களும் இம்முறை அமைக்கப்படவுள்ளன.
அடையாள அட்டை வைத்து இருக்கும் குடியிருப்பாளர்கள் ஆளுக்கு ஒரு முகக்கவசத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.
வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் வசிப்பவர்களுக்கு முகக்கவசங்களை மனிதவள அமைச்சு விநியோகம் செய்யும்.
வர்த்தக, தொழில் அமைச்சரும் மக்கள் கழகத்தின் துணைத் தலைவருமான திரு சான் சுன் சிங், மொத்தம் ஆறு மில்லியன் முகக்கவசங்கள் விநியோகிக்கப்படும் என்று தெரிவித்தார்.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரர் ஆகுங்கள். https://tmsub.sg/online

