சிங்கப்பூரில் ஜூன் 2 முதல் ஆயுர்வேதம் உட்பட பாரம்பரிய சிகிச்சைகளுக்கு அனுமதி

கொவிட்-19 கிருமிப் பரவல் முறியடிப்புத் திட்டம், வரும் ஜூன் 2ஆம் தேதியன்று ஒரு முடிவுக்கு வர உள்ள நிலையில், ஆயுர்வேத சிகிச்சை பெற அனுமதிக்கப்படும்.

மருத்துவப் பிரச்சினைகளை சமாளிக்கவும் நோயால் ஏற்படக்கூடிய வலியைச் சற்று தணிக்கவும் சிலர் நாடிச் செல்லும் பாரம்பரிய சிகிச்சைமுறைகள் அனுமதிக்கப்படவுள்ளன.

உடலியக்கம் மற்றும் எலும்பு தொடர்பான சிகிச்சைகளையும் மக்கள் பெற்றுக்கொள்ளலாம்.

படிப்படியாக தொடங்கப்படவுள்ள சுகாதாரப் பராமரிப்புச் சேவைகள் குறித்த விவரங்களை சுகாதார அமைச்சு நேற்று (மே 22) வெளியிட்டது.

பொருளியல் சார்ந்த துறைகள் மீண்டும் தொடங்கப்படுவதற்கு ஏற்ப இச்சேவைகளும் கட்டம் கட்டமாக ஜூன் 2 முதல் தொடங்கும் என்று அமைச்சு கூறியது.

மருத்துவமனை அடிப்படையிலான பராமரிப்பு, நிபுணத்துவ வெளிநோயாளிச் சேவைகள், மருத்துவ சிகிச்சைகள் மற்றும் கூடுதல் தேவைகளுடைய நோயாளிகளுக்கான சுகாதாரப் பராமரிப்புத் துணைச் சேவைகள் போன்றவை ஜூன் 2 முதல் தொடரும். இனியும் நாள் கடத்த முடியாமல் பல மாதங்களாகத் தள்ளி வைக்கப்பட்ட பராமரிப்புச் சேவைகள் இதில் அடங்கும் என்று கூறப்படுகிறது.

மருத்துவத் தேவையையும் சுகாதாரப் பராமரிப்பை வழங்குவோரின் எண்ணிக்கையையும் கருதி நாள்பட்ட நோய் தொடர்பான பராமரிப்பும் தொடரலாம். காய்ச்சலுக்கான தடுப்பூசி மருந்து, ராணுவ முன் சேர்க்கை நடவடிக்கையான மருத்துவப் பரிசோதனை ஆகியவையும் தொடங்கும்.

இதற்கிடையே சமூகத்தில் கிருமித்தொற்று ஏற்படும் அபாயம் தொடர்ந்து இருப்பதால், முடிந்தவரை மருத்துவப் பிரச்சினைகளுக்கு நேரடியாகச் செல்வதைத் தவிர்க்குமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெறலாம் என்றும் மருந்தை விநியோகச் சேவை வழி பெறலாம் என்றும் அது கூறியுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!