(காணொளி) தமிழில் நோன்புப் பெருநாள் வாழ்த்துகள் தெரிவித்த அமைச்சர்

(காணொளி) தமிழில் நோன்புப் பெருநாள் வாழ்த்துகள் தெரிவித்த அமைச்சர்

1 mins read
95b39894-fa91-4048-9df2-a4df6f8e206e
சிங்கப்பூரில் இன்று (மே 24) நோன்புப் பெருநாள் கொண்டாடப்படும் நிலையில் தற்காப்பு, வெளியுறவு  அமைச்சுகளின் மூத்த துணை அமைச்சர் டாக்டர் முகம்மது மாலிக்கி ஒஸ்மான் இந்திய முஸ்லிம்களுக்கு நோன்புப் பெருநாள் வாழ்த்துகளைத் தமிழில் தெரிவித்துள்ளார். படம்: டாக்டர் மாலிக்கி ஒஸ்மான் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றிய காணொளியிலிருந்து எடுக்கப்பட்டது -

சிங்கப்பூரில் இன்று (மே 24) நோன்புப் பெருநாள் கொண்டாடப்படும் நிலையில் தற்காப்பு, வெளியுறவு அமைச்சுகளின் மூத்த துணை அமைச்சர் டாக்டர் முகம்மது மாலிக்கி ஒஸ்மான் இந்திய முஸ்லிம்களுக்கு நோன்புப் பெருநாள் வாழ்த்துகளைத் தமிழில் தெரிவித்துள்ளார்.

தமிழில் வாழ்த்துகளைத் தெரிவிக்கும் காணொளி ஒன்றையும் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அவர்.

(முழுத்திரை பொத்தானை அழுத்தி காணொளியை முழுமையாகக் காணுங்கள்.)

இந்த ஆண்டு நோன்புப் பெருநாள் வித்தியாசமாகக் கொண்டாடப்படுவதைக் குறிப்பிட்ட அவர், "அன்பு, கருணை, நட்பு என்று நோன்புப் பெருநாள் உணர்வை மேலோங்கச் செய்வோம்," என்றும் தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

காணொளியில் தமிழில் பேசும் அவர், நோன்புப் பெருநாளின் முக்கிய அம்சத்தை மறந்துவிடக்கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரின் ஃபேஸ்புக் பதிவில் காணொளிக்கு: https://www.facebook.com/MalikiOsman/videos/251428769274752/?v=251428769274752

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரர் ஆகுங்கள். https://tmsub.sg/online

குறிப்புச் சொற்கள்