'10ல் 9 பேருக்கு தொடர்ந்து வீட்டில் இருந்து வேலை செய்ய விருப்பம்'

சுமார் 90 நிறுவனங்களைச் சேர்ந்த 9,000 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் பத்தில் ஒன்பது பேர் தொடர்ந்து வீட்டில் இருந்து வேலை செய்ய விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர்.

எப்போதும் வீட்டில் இருந்து வேலை செய்ய விரும்புவதாக 15 விழுக்காட்டினர் ஆய்வில் கூறியிருந்ததாகவும் அறியப்படுகிறது.

வீட்டில் இருந்து வேலை செய்யும்போது செலவிடப்படும் நேரம் வெவ்வேறாக இருக்க வேண்டும் என்று மற்றவர்கள் கூறினர்.

கொவிட்-19 சூழலால் வீட்டில் இருந்து வேலை செய்யும் வழக்கத்தை ருசி கண்டுவிட்ட பின்னர், அதைத் தொடர்ந்து கடைப்பிடிக்க பலரும் விரும்புவதாக கூறப்படுகிறது.

- வீட்டிற்கும் வேலையிடத்திற்குமாக அலையத் தேவையில்லை.

- நேரத்தை வகுத்துக்கொள்வதில் கூடுதல் நெகிழ்வுத்தன்மை ஏற்பட்டுள்ளது.

- அத்துடன் வேலைக்கும் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் இடையே கூடுதல் சமநிலை காண முடிகிறது ஆகியவற்றை நன்மைகள் என ஆய்வில் பங்கேற்றோர் சுட்டினர்.

இருப்பினும் மின்சாரக் கட்டணம், ‘வைஃபை பூஸ்டர்’, அச்சுப் பொறிகள் ஆகியவற்றுக்குக் கூடுதல் செலவு செய்ய வேண்டி இருந்ததாக சிலர் தெரிவித்தனர்.

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரர் ஆகுங்கள். https://tmsub.sg/online

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!