தெம்பனிசில் உள்ள குழந்தைப் பராமரிப்பு நிலையத்தில் பணிக்குச் சென்ற பெண்ணுக்கு கிருமித்தொற்று

குழந்தைப் பராமரிப்பு நிலையத்தின் ஊழியர் ஒருவர் உட்பட 3 சிங்கப்பூரர்களுக்கு நேற்று (மே 24) கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது.

தெம்பனிசில் இருக்கும் இமான் குழந்தைப் பராமரிப்பு நிலையத்தில் பணிக்குச் சென்ற அந்த 33 வயது பெண், நேற்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட 548 பேரில் ஒருவர் என்று சுகாதார அமைச்சு குறிப்பிட்டது.

அவருக்கு நேற்று முன்தினம் கிருமித்தொற்று அறிகுறிகள் தென்பட்டதையடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், அதே நாளில் கொவிட்-19 உறுதி செய்யப்பட்டது.

மற்றொரு சிங்கப்பூரரான, SSKBJV ஊழியர் விடுதியில் பணியாற்றிய 55 வயது ஆடவருக்கு இம்மாதம் 17ஆம் தேதி அறிகுறிகள் தென்பட்டன. நேற்று முன்தினம் அவருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது.

கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட மூன்றாவது சிங்கப்பூரர் 35 வயதான பெண்பணி. CDPL துவாஸ் ஊழியர் தங்கும் விடுதியில் பணியாற்றி, பின் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட 37 வயது ஆடவரின் குடும்ப உறுப்பினர் இவர்.

எஞ்சிய 544 பேர் விடுதிகளில் தங்கியிருக்கும் ஊழியர்கள்.

நேற்று உறுதி செய்யப்பட்ட சம்பவங்களில் 99 விழுக்காட்டினர் ஏற்கெனவே கண்டறியப்பட்ட கிருமித்தொற்று குழுமங்களுடன் தொடர்புடையவர்கள்.

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரர் ஆகுங்கள். https://tmsub.sg/online

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!