சுடச் சுடச் செய்திகள்

அதிகரிக்கும் டெங்கி பாதிப்பு; கொசு இனப் பெருக்கமுள்ள வீடுகளுக்கு கூடுதல் அபராதம்

அடிக்கடி கொசு இனப்பெருக்கம் செய்யும் அல்லது கொசு இனப்பெருக்கம் செய்யும் இடங்கள் அதிகமாக உள்ள வீடுகளுக்கு  அதிக அபராதம் விதிக்கப்படும் என்று தேசிய சுற்றுப்புற வாரியம் (என்இஏ) எச்சரித்துள்ளது. 

தற்போது கொசு இனப்பெருக்கம் காணப்படும் வீடுகளுக்கு $200 அபராதம் விதிக்கப்படுகிறது. எத்தனை இடங்களில் கொசு இனப்பெருக்கம் உள்ளது என்பது கணக்கில் கொள்ளப்படுவதில்லை. நான்காவது முறை குற்றம் புரிவோர் நீதிமன்றத்துக்குச் செல்ல வேண்டும்.

ஜூலை 15ஆம் தேதியிலிருந்து ஒன்றுக்கும் அதிகமான இடங்களில் கொசு இனப்பெருக்கம் காணப்படும் அல்லது  அவர்கள் கொசுப் பெருக் கமுள்ள குழுமத்தில் இருப்பதாக சட்டபூர்வமான கடிதம் அனுப்பப்பட்ட பிறகும் கொசு இனப்பெருக்கம் காணப்படும் வீடுகளுக்கு $300 அபராதம் விதிக்கப்படும்.

இந்த ஆண்டு டெங்கி சம்பவங்கள் திங்கள்கிழமை நிலவரப்படி 12,542 ஆக உயர்ந்துள்ளது.

ஜூன் 13ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் வாராந்திர டெஙகி நோயாளிகளின் எண்ணிக்கையும் 1,000ஐ தாண்டியுள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டிலிருந்து இதே காலகட்டத்தில் பதிவான  ஆக அதிகமான எண்ணிக்கையாகும் என்று வாரியம் கூறியது. 

வீடுகளில் காணப்படும் கொசு இனப்பெருக்கம் கணிசமாக அதிகரித்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது வீடுகளில் கொசு இனப்பெருக்கம் இருப்பது 50% அதிகரித்துள்ளது.

கிருமி பரவல் முறியடிப்பு காலமான ஏப்ரல் 1 முதல் ஜூன் 1 வரையிலான காலகட்டத்தில் கொசுப் பெருக்கம் ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது என்று வாரியம் கூறியது.

முதல் முறை குற்றவாளிகள் $3,000 அபராதம் செலுத்த வேண்டும். தற்போது இது $2,000 ஆக உள்ளது. மூன்றாவது முறையும் அதற்குப் பிறகும் குற்றம் புரிவோர் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும்.

நகர மன்றங்களிலும் அமலாக்க நடவடிக்கைகள் கடுமையாக்கப்படவுள்ளது. கால்வாய் போன்ற பொது இடங்களில் கொசுப் பெருக்கம் காணப்பட்டால் அபராதம் அதிகரிக்கப்படும் என்றும் வாரியம் குறிப்பிட்டது.

டெங்கி குழுமமாக அடையாளம் காணப்பட்ட இடங்களில் கொசு இனப் பெருக்கம் காணப்பட்டால் அந்த நகர மன்றத்திற்கு தற்போது $5,000 அபராதம் விதிக்கப்படுகிறது.

 

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon