சிங்கப்பூரில் மேலும் 31 ஊழியர் தங்கும் விடுதிகளும் மூன்று விடுதிகளின் நான்கு புளோக்குகளில் உள்ள ஊழியர்களும் கொவிட்-19லிருந்து விடுபட்டதாக நேற்று (ஜூன் 23) சுகாதார அமைச்சு தெரிவித்தது.
இதனையடுத்து, கூடுதலாக 3,700 ஊழியர்கள் பணிக்குத் திரும்ப அனுமதி அளிக்கப்படலாம். இதனையும் சேர்த்து மொத்தம் சுமார் 79,000 ஊழியர்கள் கிருமித்தொற்றிலிருந்து விடுபட்டனர்.
இருப்பினும் அவர்களில் சுமார் 17,000 ஊழியர்கள் மட்டுமே தற்போது பணியைத் தொடங்க முடியும். மற்றவர்கள் 'டிரேஸ் டுகெதர்' செயலியைப் பதிவிறக்கம் செய்து சில நிபந்தனைகளை நிறைவு செய்த பிறகே பணிக்குச் செல்ல அனுமதிக்கப்படுவர்.
சிங்கப்பூரில் 323,000 வெளிநாட்டு ஊழியர்கள் விடுதிகளில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online

