முன்னாள் அறங்காவலர் மீது குற்றச்சாட்டு

லிட்டில் இந்தியாவில் உள்ள ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோயிலின் முன்னாள் செயலாளரும் அறங்காவலருமான ராதாகிருஷ்ணன் செல்வகுமார், 64, அறப்பணிகள் சட்டத்தின்கீழ் தடை விதிக்கப்பட்டு இருந்தபோதிலும், அந்தக் கோயிலின் நிர்வாக அமைப்பின் உறுப்பினர் என்ற முறையில் செயல்பட்டு இருக்கிறார் என்று இம்மாதம் 24 ஆம் தேதி நீதிமன்றத்தில் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

அவர், 2017 மே மாதம் 9ஆம் தேதிக்கும் 2018 ஏப்ரல் 30ஆம் தேதிக்கும் இடையில் இக்குற்றத்தைச் செய்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2018 ஏப்ரல் 1ஆம் தேதி அறப்பணிகள் சட்டம் திருத்தப்பட்டது.

அதையடுத்து இத்தகைய குற்றச்செயலில் ஈடுபடுவோருக்கு $10,000 வரையிலான அபராதம் அல்லது மூன்று ஆண்டுகள் வரை சிறை அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்க முடியும் என்று போலிஸ் தெரிவித்துள்ளது.

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!