கொவிட்-19 பரிசோதனையில் எச்சிலைப் பயன்படுத்துவது பற்றி சிங்கப்பூர் பரிசீலனை

கொவிட்-19 பரிசோதனையில் எச்சிலைப் பயன்படுத்தலாமா என்பது பற்றி சிங்கப்பூர் சுகாதார அதிகாரிகள் பரிசீலித்து வருகிறார்கள்.

கொவிட்-19 பரிசோதனை நடைமுறையில் எச்சில் பரிசோதனையையும் உள்ளடக்கும் சாத்தியம் பற்றி உலகளவிலும் உள்ளூர் நிலையிலும் நடந்து வரும் மருந்தக ஆய்வு மற்றும் ஆதாரங்களைத் தொடர்ந்து சுகாதார அமைச்சு மறுபரிசீலனை செய்யும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

புதிய பரிசோதனைத் தொழில்நுட்பங்கள் பொருத்தமானவையாக உள்ளனவா என்பது பற்றி மதிப்பிடப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக இந்தப் பரிசீலனை இடம்பெறுகிறது என்று சுகாதார அமைச்சு தெரிவித்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டது.

ஹாங்காங், ஜப்பான், அமெரிக்காவில் எச்சில் மூலம் பரிசோதனை ஏற்கெனவே நடத்தப்பட்டு வருகிறது.எச்சில் பரிசோதனை மூலம் சுகாதார ஊழியர்களுக்குக் கிருமி தொற்றும் வாய்ப்பு குறைவு என்றும் கூறப்படுகிறது.

இருந்தாலும் சில வல்லுநர்கள் எச்சிலைப் பயன்படுத்தி கொவிட்-19 பரிசோதனை நடத்துவது நம்பகத்தன்மைமிக்கதா என்பது பற்றி கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

கொவிட்-19 கிருமி தொற்றி இருக்கிறதா இல்லையா என்பதை தீர்மானிப்பதில் எச்சிலைவிட உள்மூக்கில் இருந்து பெறப்படும் சளித் திரவமே துல்லியமானதாக இருக்கு மென அவர்கள் கூறுகிறார்கள்.

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!