கிருமிப் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மீறிய 140 பேரின் வேலை அனுமதிச்சீட்டுகள் ரத்து

கிருமிப் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மீறிய 140 பேரின் வேலை அனுமதிச்சீட்டுகள் ரத்து

1 mins read
aa902b71-d39c-49b7-b1fb-906fc0756333
சிங்கப்பூரில் கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அதிரடி நடவடிக்கைகள் நடப்பில் இருந்த காலத்தில், கடந்த மாதம் ராபர்ட்சன் கீயில் விதிமுறைகளை மீறியதற்காக நேற்று (ஜூன் 25) அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்ட எழுவரில் அறுவரது வேலை அனுமதிச் சீட்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அதிரடி நடவடிக்கைகள் நடப்பில் இருந்த காலத்தில், கடந்த மாதம் ராபர்ட்சன் கீயில் விதிமுறைகளை மீறியதற்காக நேற்று (ஜூன் 25) அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்ட எழுவரில் அறுவரது வேலை அனுமதிச் சீட்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அவர்கள் சிங்கப்பூரில் வேலை செய்ய நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சு நேற்று தெரிவித்தது.

அதிரடி நடவடிக்கைகள் நடப்பில் இருந்தபோது விதிமீறியதற்காக, மே மாதம் முதல் தேதியிலிருந்து நேற்று வரை வேலை அனுமதிச்சீட்டுகள் ரத்து செய்யப்பட்ட 140 பேரில் இவர்களும் அடக்கம்.

இந்த 140 பேரில் 42 பேர் வீட்டிலேயே இருக்க வேண்டிய உத்தரவு, தனிமைப்படுத்தல் உத்தரவு ஆகியவற்றை மீறியவர்கள்.

மற்ற 98 பேரும் அந்தக் காலகட்டத்தில் உணவருந்தியது, மது அருந்தியது, பொது இடங்களில் ஒன்று கூடியது போன்றவற்றில் ஈடுபட்டவர்கள்.

சிங்கப்பூரில் வேலை அனுமதிச் சீட்டுடன் இருப்பவர்கள் அனைவரும் சிங்கப்பூரின் சட்டத்துக்கு கட்டுப்பட வேண்டும்; இன்றேல், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சு தெரிவித்தது.

பாதுகாப்பான இடைவெளி நடைமுறை உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் வீட்டிலேயே தங்கியிருக்க ஆணை, தனிமைப்படுத்தல் ஆணை போன்றவற்றை உறுதி செய்வது நிறுவனங்கள், ஊழியர்கள் என அனைவரது கூட்டு பொறுப்பு என்றும் மனிதவள அமைச்சு குறிப்பிட்டது.

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online

குறிப்புச் சொற்கள்