சிங்கப்பூரில் புதிதாக 291 பேருக்கு கொவிட்-19; மொத்த எண்ணிக்கை 43,000ஐ கடந்தது

சிங்கப்பூரில் புதிதாக 291 பேருக்கு கொவிட்-19; மொத்த எண்ணிக்கை 43,000ஐ கடந்தது

1 mins read
e47d6bc6-2d4e-4195-a83f-7f9a3f6b371d
இன்று உறுதி செய்யப்பட்ட கிருமித்தொற்று சம்பவங்களில் 11 உள்ளூர் சமூகத்துடன் தொடர்புடையவை என சுகாதார அமைச்சு தெரிவித்தது. அவர்களில் ஐவர் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள்; அறுவர் வேலை அனுமதிச் சீட்டுடன் இருப்பவர்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் இன்று (ஜூன் 27) நண்பகல் நிலவரப்படி புதிதாக 291 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 43,246 ஆகியுள்ளது.

இன்று உறுதி செய்யப்பட்ட கிருமித்தொற்று சம்பவங்களில் 11 உள்ளூர் சமூகத்துடன் தொடர்புடையவை என சுகாதார அமைச்சு தெரிவித்தது. அவர்களில் ஐவர் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள்; அறுவர் வேலை அனுமதிச் சீட்டுடன் இருப்பவர்கள்.

மற்ற சம்பவங்கள் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் தொடர்பிலானவை.

இதன் தொடர்பிலான கூடுதல் விவரங்களை அமைச்சு பின்னர் வெளியிடும்.

நேற்று உள்ளூர் சமூகத்தில் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட அறுவரில் ஒருவர் விளையாட்டு மற்றும் சமூக நடவடிக்கைகளுக்காக பெரிய அளவிலான கூட்டத்தினரைச் சந்தித்தவர் என்றும் அதன் தொடர்பில் விசாரிக்கப்படுவதாகவும் அமைச்சு தெரிவித்தது.

சுகாதாரப் பராமரிப்புத் துறையைச் சேர்ந்த இருவருக்கு நேற்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது.

நேற்று மேலும் 221 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். அதனையும் சேர்த்து இது வரை 36,814 பேர் குணமடைந்துள்ளனர்.

இதுவரை கொரோனா கிருமித்தொற்றால் 26 பேர் உயிரிழந்துள்ளனர்; கிருமித்தொற்று கண்ட, ஆனால் வேறு காரணங்களால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11ஆக நீடிக்கிறது.

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online

குறிப்புச் சொற்கள்