சிங்கப்பூரில் புதிதாக 136 பேருக்கு கொவிட்-19; சமூகத்தில் 18 சம்பவங்கள்

சிங்கப்பூரில் புதிதாக 136 பேருக்கு கொவிட்-19; சமூகத்தில் 18 சம்பவங்கள்

1 mins read
1987cade-1358-4986-ab5a-85c1b28d258d
இன்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் எழுவர் வெளிநாடுகளிலிருந்து திரும்பிய பின், இங்கு இல்லத் தனிமைப்படுத்தப்பட்டவர்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் இன்று (ஜூலை 5) நண்பகல் நிலவரப்படி புதிதாக 136 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 44,800 ஆகியுள்ளது.

இன்று உறுதி செய்யப்பட்ட கிருமித்தொற்று சம்பவங்களில் 18 உள்ளூர் சமூகத்துடன் தொடர்புடையவை என சுகாதார அமைச்சு தெரிவித்தது. அவர்களில் அறுவர் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள்; 12 பேர் வேலை அனுமதிச் சீட்டு வைத்திருப்பவர்கள்.

இந்த 18 பேரில் ஐவர், ஏற்கெனவே கிருமித்தொற்று கண்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்றும் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்தது.

இன்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் எழுவர் வெளிநாடுகளிலிருந்து திரும்பிய பின், இங்கு இல்லத் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்.

மற்ற சம்பவங்கள் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் தொடர்பிலானவை.

இதன் தொடர்பிலான கூடுதல் விவரங்களை அமைச்சு பின்னர் வெளியிடும்.

குறிப்புச் சொற்கள்