சுடச் சுடச் செய்திகள்

கிருமித்தொற்று கண்டவர் 8 முறை சென்று வந்த அல்-அன்சார் பள்ளிவாசல் திறக்கப்பட்டது

பிடோக் நார்த்தில் இருக்கும் அல் அன்சார் பள்ளிவாசலுக்கு, கிருமித்தொற்று கண்ட ஒருவர் ஜூன் 26 முதல் ஜூலை 2 வரையிலான காலகட்டத்தில் 8 தடவை தொழுகைக்காக சென்று வந்ததாக சுகாதார அமைச்சு நேற்று முன்தினம் (ஜூலை 7) தெரிவித்தது.

அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் மாலையிலிருந்து நேற்று வரை அந்த பள்ளிவாசல் மூடப்பட்டு கிருமிநாசினி உள்ளிட்டவை கொண்டு சுத்தப்படுத்தப்பட்டது.

இன்று அந்தப் பள்ளிவாசல் திறக்கப்பட்டது. 

கீழ்க்கண்ட நேரங்களில் அந்த நபர் அல்-அன்சார் பள்ளிவாசலுக்குச் சென்றிருந்தார்:

ஜூன் 26 - 8.43pm to 8.59pm

ஜூன் 27 - 7.25pm to 7.39pm மற்றும் 8.36pm to 8.54pm

ஜூன் 28 - 7.21pm to 7.38pm மற்றும் 8.40pm to 8.58pm

ஜூன் 30 - 7.21pm to 7.35pm

ஜூலை 1 - 8.32pm to 8.55pm

ஜூலை 2 - 8.34pm to 8.51pm

இந்த நேரங்களில் அந்தப் பள்ளிவாசலுக்குச் சென்றவர்கள் தங்களது உடல் நலனை அணுக்கமாகக் கண்காணித்து, தேவைப்பட்டால் மருத்துவரின் உதவியை உடனடியாக நாடுமாறு சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் (Muis) அறிவுறுத்தியுள்ளது.

உடல்நலம் இல்லாதவர்கள் வீட்டிலேயே தொழுகையை மேற்கொள்ளும்படியும் அது கேட்டுக்கொண்டுள்ளது.

பினாங்கு கல்ச்சர், ஜெம் கடைத்தொகுதியில் உள்ள டொன் டொன் டோங்கி, ஜூரோங் பாயின்டில் உள்ள சிங்டெல் கடை ஆகிய இடங்களுக்கு  கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் (கிருமித்தொற்றைப் பரப்பும் நிலையில் இருந்தவர்கள்) சென்று வந்ததாக சுகாதார அமைச்சு நேற்று (ஜூலை 7) தெரிவித்தது.

கொவிட்-19ஆல் பாதிக்கப்பட்டவர்கள் 30 நிமிடங்களுக்கு மேலாக இருந்த இடங்கள், நேரம் பற்றிய விவரங்களை சுகாதார அமைச்சு அதன் இணையப்பக்கத்தில் வெளியிட்டு வருகிறது. அந்த இடங்களுக்கு, குறிப்பிட்ட நேரங்களில் சென்றவர்கள் தங்களது உடல் நலனைக் கண்காணிப்பதுடன், உடல் நலக் குறைவு ஏற்பட்டால் உடனடியாக, மருத்துவரின் உதவியை நாடவேண்டும். ஆனால், அந்த இடங்களைத் தவிர்க்க வேண்டியதில்லை.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon