செயல்திறன் மிக்க 100 தாதியருக்கு கௌரவ விருது

சிங்கப்பூரில் உள்ள 100 தாதியருக்கு விருது வழங்கி கௌரவித்துள்ளது சுகாதார அமைச்சு.

தாதியர் நற்பண்பு விருது மிதமிஞ்சிய செயல்திறனை வெளிப்படுத்தும், நிபுணத்துவ மேம்பாட்டில் பங்கேற்கும் தாதியருக்கும் தாதியர் நிபுணத்துவத் தொழில் வளர்ச்சியில் அக்கறை காட்டும் தாதியருக்கும் வழங்கப்படுவதாக அமைச்சு குறிப்பிட்டு உள்ளது.

சமூகப் பராமரிப்புத் துறை முதல் தனியார் மருத்துவமனைகள் மற்றும் பொது சுகாதாரப் பராமரிப்பு நிறுவனங்கள் ஆகியவற்றைச் சேர்ந்த தாதியர் இவ்வாறு கௌரவிக்கப்படுகிறார்கள்.

விருது பெறும் தாதியர் தங்களது சீருடையில் அணிந்துகொள்ளும் பதக்கத்தையும் $1,000 ரொக்கப் பரிசையும் பெறுவர்.

தற்போது சிங்கப்பூரில் உள்ள தாதியர் ஊழியரணியில் 42,000 பேர் உள்ளனர்.

2013ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 36,000 ஆக இருந்தது.

மருத்துவத் துறையில் அவர்களுக்கான பங்கும் விரிவடைந்து உள்ளது. நோயாளிகளைப் பராமரிக்கும் தரம் உயரும் வகையிலான சமூகத் தாதிமை, கல்வி, ஆய்வு மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றைச் சூழ்ந்த அவர்களின் பணி அமைந்து வருகிறது.

மருந்தகத் திறன்களையும் குறிப்பிடத்தக்க அம்சங்களில் உள்ள அறிவாற்றல் ஆகியவற்றை மேலும் வளர்த்துக்கொள்வதில் ஆர்வம் காட்டும் தாதியர், தேசிய தாதிமை கல்விக்கழக இணையத்தளத்தில் நடத்தப்படும் வகுப்புகளுக்குப் பதிவு செய்யலாம். தாதியருக்கான வாழ்நாள் கற்றலை வளர்க்கும் நோக்கில் கடந்த மார்ச் மாதம் இந்த இணையத்தளம் தொடங்கப்பட்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!