சிங்கப்பூரில் புதிதாக 249 பேருக்கு கொவிட்-19; ஐவர் வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்கள்

சிங்கப்பூரில் புதிதாக 249 பேருக்கு கொவிட்-19; ஐவர் வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்கள்

1 mins read
5c37ba01-389b-4c97-83ae-e8c07b01151c
இன்று உறுதி செய்யப்பட்ட கிருமித்தொற்று சம்பவங்களில் 16 உள்ளூர் சமூகத்துடன் தொடர்புடையவை என சுகாதார அமைச்சு தெரிவித்தது. அவர்கள் அனைவரும் வேலை அனுமதிச் சீட்டு வைத்திருப்பவர்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் இன்று (ஜூலை 15) நண்பகல் நிலவரப்படி புதிதாக 249 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 46,878 ஆகியுள்ளது.

இன்று உறுதி செய்யப்பட்ட கிருமித்தொற்று சம்பவங்களில் 16 உள்ளூர் சமூகத்துடன் தொடர்புடையவை என சுகாதார அமைச்சு தெரிவித்தது. அவர்கள் அனைவரும் வேலை அனுமதிச் சீட்டு வைத்திருப்பவர்கள்.

இன்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் ஐவர் வெளிநாட்டிலிருந்து திரும்பிய பின், இங்கு இல்லத் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்.

மற்ற சம்பவங்கள் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் தொடர்பிலானவை.

கூடுதல் விவரங்களை அமைச்சு பின்னர் வெளியிடும்.

குறிப்புச் சொற்கள்