‘ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் கொவிட்-19 நோய்த்தொற்று எண்ணிக்கை சற்று அதிகரிக்கக்கூடும்’

வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் கொவிட்-19 நோய்த்தொற்று எண்ணிக்கை, வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கக்கூடும். ஏனெனில் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை நிறைவுசெய்யும் ஊழியர்கள் பலருக்கு கொவிட்-19 சோதனை மேற்கொள்ளப்படவுள்ளது என சுகாதார அமைச்சு நேற்று (ஜூலை 14) தெரிவித்தது.

தங்கும் விடுதிகளில் இருந்து வந்த சில ஊழியர்களுக்கு கொவிட்-19 தொற்று பாதிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது எனவும் அதனால் பாதிப்புச் சம்பவங்கள் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சு கூறியது.

இதுவரையிலும் 215,000 வெளிநாட்டு ஊழியர்கள் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு நோய்த்தொற்று இல்லையென உறுதிசெய்யப்பட்டுள்ளது. இது தங்கும் விடுதிகளில் வசிப்போரில் மூன்றில் இரண்டு பகுதி. அவர்கள் நோய்த்தொற்றுப் பாதிப்பில் இருந்து குணமடைந்திருக்க வேண்டும் அல்லது நோய்த்தொற்றால் பாதிக்கப்படாதவர்களாக இருக்க வேண்டும்.

இந்த மாத இறுதிக்குள் தங்கும் விடுதியில் இருந்து ஏறக்குறைய 80 விழுக்காட்டு ஊழியர்கள் நோய்த்தொற்றில் இருந்து விடுபட்டிருப்பர் அல்லது அவர்களுக்கு கிருமித்தொற்று இல்லை என்பது உறுதி படுத்தப்பட்டிருக்கும். அவர்கள் அனைவரும் அடுத்த மாதத்தின் நடுப்பகுதிக்குள் பரிசோதனைக்கு உள்ளாக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டது.

தங்கும் விடுதிகளை நோய்த்தொற்று அற்றதாக உறுதிசெய்யும் பணி நடப்பில் இருப்பதாகவும், அவ்வாறு உறுதிசெய்யப்பட்ட தங்கும் விடுதிகளைச் சேர்ந்த ஊழியர்கள் பணிக்குத் திரும்பலாம் என்றும் அமைச்சு கூறியது.

கடந்த செவ்வாய்க்கிழமை மட்டும் 193 தங்கும் விடுதிக் கட்டடங்கள் நோய்த்தொற்று இல்லாதவையாக அறிவிக்கப்பட்டது. இவற்றுடன் சேர்த்து இதுவரையிலும் மொத்தம் 818 தங்கும் விடுதிக் கட்டடங்கள் நோய்த்தொற்று அற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவற்றுள் மண்டாய் லாட்ஜ், பிபிடி ஆகிய தங்கும் விடுதிகளும் அடக்கம்.

வெளிநாட்டு ஊழியர்கள் தங்குவதற்காக விடுதிகளாக மாற்றப்பட்டுள்ள 170 தொழிற்சாலைகள், 22 தற்காலிக கட்டுமான விடுதிகள் ஆகியவையும் நோய்த்தொற்று இல்லாத இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அங்கு தங்கியிருக்கும் ஊழியர்கள் சரியான தங்குமிடத்திற்கு மாறுவதற்காகக் காத்திருக்கின்றனர். அதன் பின்னர் அவர்கள் தங்கள் பணியைத் தொடரலாம் என்றும் அமைச்சு கூறியது.

நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் தங்கும் விடுதி நடத்துநரும் வெளிநாட்டு ஊழியர்களின் நிறுவனங்களும் மூன்று விதிமுறைகளைக் கடைப்பிடிக்கவேண்டும்.

வேலைக்குச் செல்வதற்கு ஊழியர்களை வாகனத்தில் ஏற்றும் போதும் வேலை முடிந்து விடுதியில் இறக்கிவிடும்போதும் ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் எல்லா ஊழியர்களும் கூடாமல் இருக்கும் வகையில் ஊழியர்களை ஏற்றி, இறக்கிவிடும் இடங்களை நிர்ணயிப்பது தங்கும் விடுதி நடத்துநர்களின் பொறுப்பு.

இரண்டாவதாக, நிறுவனங்களின் முதலாளிகள் தங்கள் நிறுவனத்தின் ஊழியர்களின் முகவரியை மனிதவள அமைச்சுடன் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

மூன்றாவதாக, ஊழியர்கள் ஒவ்வொருவரும் தங்கள் திறன்பேசிகளில் டிரேஸ்டுகெதர் (TraceTogether) செயலியை பதிவிறக்கம் செய்து செயல்படுத்திக் கொள்ளவேண்டும். அத்துடன் மனிதவள அமைச்சின் ‘FWMOMCare’ என்னும் செயலியையும் பதிவிறக்கம் செய்து நாள்தோறும் தங்களது உடல்வெப்பநிலை குறித்த தகவல் மற்றும் தங்கியிருக்கும் விடுதி குறித்த விவரத்தையும் தெரிவிக்க வேண்டும்.

இந்த மூன்று விதிமுறைகளையும் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் பல ஒரே வாரத்தில் கடைப்பிடித்துள்ளதாக மனிதவள அமைச்சு தெரிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!