சிங்கப்பூரில் கொரோனா தொற்றால் 27வது நபர் உயிரிழப்பு

சிங்கப்பூரில் கொரோனா தொற்றால் 27வது நபர் உயிரிழப்பு

1 mins read
33be19d3-e7f8-4051-8427-4cf903e6685c
இந்த ஆடவர் செங்காங் பொது மருத்துமவனையில்  சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார் என நேற்று (ஜூலை 14) தெரிவிக்கப்பட்டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் கொவிட்-19 தொற்றுப் பாதிப்பால் மாண்டவர்களில் 27வது நோயாளியான 62 வயது சிங்கப்பூரர் முன்னதாக நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர் என்று மனித வள அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி இவருக்கு கொவிட்-19 தொற்று இருப்பது சோதனையில் தெரியவந்தது.

சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட 17,168ஆவது ஆள் இவர்.

இந்த ஆடவர் செங்காங் பொது மருத்துமவனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார் என நேற்று (ஜூலை 14) தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து அவரது குடும்பத்தினருக்குத் தெரிவிக்கப்பட்டதாகவும் அவர்களுக்கு உதவி வருவதாகவும் அமைச்சு தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்