ஆகஸ்ட் நடுப்பகுதிக்குள் தங்கும் விடுதிகளில் உள்ள எல்லா வெளிநாட்டு ஊழியர்களுக்கும் சோதனை

தங்கும் விடுதிகளில் வசிக்கும் அனைத்து வெளிநாட்டு ஊழியர்களுக்கும் கொவிட்-19 பரிசோதனை நடத்தி, அவர்களைக் கிருமித்தொற்று அற்றவர்களாக உறுதிப்படுத்தும் நடவடிக்கை இப்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டது என்றும் அது ஆகஸ்ட் மாதம் நடுப்பகுதிக்குள் நிறைவடையும் வாய்ப்பு உள்ளது என்றும் தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை வரை கிட்டத்தட்ட 232,000 ஊழியர்கள் நோய்த்தொற்றிலிருந்து குணமாகி விட்டனர் அல்லது கிருமித்தொற்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, கிருமித்தொற்று அற்றவர்களாக அறிவிக்கப்பட்டுவிட்டனர்.

தற்போது சிங்கப்பூரில் உள்ள தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கை 323,000 என்றும் நேற்று நடைபெற்ற கொவிட்-19 தொடர்பான அமைச்சுகள்நிலை பணிக்குழுவின் இணைத் தலைவருமான திரு வோங்.

“தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்களைப் பரிசோதிக்கும் நடவடிக்கை முடிவுக்கு வந்து கொண்டிருக்கும் வேளையில், அந்தப் பிரிவிலிருந்து அண்மை நாட்களாக அதிகமானோர் கொவிட்-19 கிருமித்தொற்று ஆளாகி உள்ளனர் என்றும் அது வரும் நாட்களில் மேலும் அதிகமாகலாம்.

“சிங்கப்பூரில் உறுதி செய்யப்பட்ட கொவிட்-19 நோயாளிகளில் 94 விழுக்காட்டினர் தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள். இம்மாதத் தொடக்கத்திலிருந்து சராசரியாக நாளொன்றுக்கு கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை 192 ஆக இருந்தது. அது கடந்த திங்கட்கிழமையிலிருந்து 284க்கு உயர்ந்துவிட்டது.

“தங்கும் விடுதிகளில் வசிக்கும் 300,000 ஊழியர்கள் அனைவரையும் பரிசோதனைக்கு உட்படுத்தி, அவர்களிடம் கிருமித்தொற்று இல்லை என்று அறிவித்தாலும், அவர்களிடம் இரு வாரங்களுக்கு ஒரு முறை வழக்கமான சோதனை நடத்தியாக வேண்டும். அவ்வாறு சோதனை நடத்தப்படும் பட்சத்திலும் அவர்களிடம் கிருமித்தொற்று கண்டுபிடிக்கப்படும் சாத்தியம் இருக்க வாய்ப்புள்ளது,” என்றும் திரு வோங் விவரித்தார்.

கிருமித்தொற்றிலிருந்து குணமாகியும் இன்னும் வேலைக்குத் திரும்ப முடியாத வெளிநாட்டு ஊழியர்கள் பற்றி இன்றைய மெய்நிகர் செய்தியாளர் கூட்டத்தில் கருத்துரைத்த சுகாதார அமைச்சு, அவர்கள் தங்கியிருக்கும் விடுதிகளிலோ அல்லது விடுதிகளின் புளோக்குகளிலோ இன்னும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஊழியர்கள் இருப்பதே அதற்குக் காரணம் என்றும் விளக்கியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!