சிங்கப்பூரில் இன்று (ஜூலை 21) நண்பகல் நிலவரப்படி புதிதாக 399 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 48,434 ஆகியுள்ளது.
இன்று உறுதி செய்யப்பட்ட கிருமித்தொற்று சம்பவங்களில் 9 உள்ளூர் சமூகத்துடன் தொடர்புடையவை என சுகாதார அமைச்சு தெரிவித்தது. அவர்களில் ஒருவர் சிங்கப்பூரர் அல்லது நிரந்தரவாசி; மற்ற 8 பேர் வேலை அனுமதிச் சீட்டு வைத்திருப்பவர்கள்.
இன்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் மூவர் வெளிநாட்டிலிருந்து திரும்பிய பின், இங்கு இல்லத் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்.
மற்ற சம்பவங்கள் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் தொடர்பிலானவை.
நேற்று அமைச்சுக்கு அனுப்பப்பட்ட கொவிட்-19 பரிசோதனை முடிவுகளின் ஒரு பகுதி நண்பகல் 12 மணிக்குப் பிறகு அனுப்பப்பட்டதால், அந்த எண்ணிக்கையும் இன்றைய கிருமித்தொற்று கணக்கில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளதால், இன்று கிருமித்தொற்று எண்ணிக்கை 399 ஆக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் விவரங்களை அமைச்சு பின்னர் வெளியிடும்.

