'ஆர்ச்சர்ட் ரோடு கடைத்தொகுதிகளுக்கு கொவிட்-19ஆல் பாதிக்கப்பட்டவர்கள் சென்றனர்'

'ஆர்ச்சர்ட் ரோடு கடைத்தொகுதிகளுக்கு கொவிட்-19ஆல் பாதிக்கப்பட்டவர்கள் சென்றனர்'

2 mins read
2bf9ac83-3525-43c8-b98d-2b2c1243285b
ஆர்ச்சர்ட் ரோட்டில் இருக்கும் ஆர்ச்சர் சென்ட்ரல், ஆர்ச்சர் கேட்வே, லக்கி பிளாசா, பிளாசா சிங்கப்பூரா போன்ற கடைத் தொகுதிகளுக்கு  கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் (கிருமித்தொற்றைப் பரப்பும் நிலையில் இருந்தவர்கள்) சென்று வந்ததாக சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது. படம்: KELVIN CHNG, ST FILE, LIANHE ZABAO, ORCHARD CENTRAL/FACEBOOK -

ஆர்ச்சர்ட் ரோட்டில் இருக்கும் ஆர்ச்சர்ட் சென்ட்ரல், ஆர்ச்சர்ட் கேட்வே, லக்கி பிளாசா, பிளாசா சிங்கப்பூரா போன்ற கடைத் தொகுதிகளுக்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் (கிருமித்தொற்றைப் பரப்பும் நிலையில் இருந்தவர்கள்) சென்று வந்ததாக சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

சிங் போஸ்ட் சென்டரில் உள்ள போன் அஸ்தெடிக்ஸ் அழகு நிலையம், ராபர்ட்சன் கீயில் உள்ள பார் பார் பிளாக் ஷீப் கோப்பிக் கடை போன்றவையும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

கொவிட்-19ஆல் பாதிக்கப்பட்டவர்கள் 30 நிமிடங்களுக்கு மேலாக இருந்த இடங்கள், நேரம் பற்றிய விவரங்களை சுகாதார அமைச்சு அதன் இணையப்பக்கத்தில் வெளியிட்டு வருகிறது. அந்த இடங்களுக்கு, குறிப்பிட்ட நேரங்களில் சென்றவர்கள் தங்களது உடல் நலனைக் கண்காணிப்பதுடன், உடல் நலக் குறைவு ஏற்பட்டால் உடனடியாக, மருத்துவரின் உதவியை நாடவேண்டும். ஆனால், அந்த இடங்களைத் தவிர்க்க வேண்டியதில்லை.

முழுமையான பட்டியலை சுகாதார அமைச்சின் இணையப்பக்கத்தில் காணலாம்.

உள்ளூர் சமூகத்தில் தினசரி சராசரி புதிய கிருமித்தொற்று எண்ணிக்கை கடந்த வாரத்தில் 10ஆக குறைந்திருக்கிறது. அதற்கு முந்தைய வாரத்தில் இந்த எண்ணிக்கை 14 ஆக இருந்தது.

ஆனால், ஏற்கெனவே அறியப்பட்ட கிருமித்தொற்று குழுமங்களுடன் தொடர்பில்லாத புதிய சம்பவங்களின் கடந்த வார தினசரி சராசரி 5ஆக குறைந்துள்ளது. அதற்கு முந்தைய வாரத்தில் அந்த எண்ணிக்கை 8 ஆக இருந்தது.

இதுவரை கொரோனா கிருமித்தொற்றால் 27 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாக கொவிட்-19 தொடர்பில் தீவிர சிகிச்சைப் பிரிவில் யாரும் சிகிச்சை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்