பொங்கோல் ஈஸ்ட்டில் தீ: 100 பேர் வெளியேற்றம்

பொங்கோல் ஈஸ்ட்டில் தீ: 100 பேர் வெளியேற்றம்

1 mins read
94d4b921-5662-43a3-8db7-28e5466c24f3
பொங்கோல் ஈஸ்ட் புளோக் 167Cன் எட்டாவது மாடியில் உள்ள ஒரு வீட்டில் இன்று  (ஜூலை 21)  காலை தீப்பற்றியது. படங்கள்: சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் ஃபேஸ்புக் பக்கம் -
multi-img1 of 2
Google News Preferred Icon

பொங்கோல் ஈஸ்ட் புளோக் 167Cன் எட்டாவது மாடியில் உள்ள ஒரு வீட்டில் இன்று (ஜூலை 21) காலை தீப்பற்றியது.

நண்பகல்வாக்கில், பூட்டியிருந்த அந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தீயணைப்புப் பணிகளில் ஈடுபடது.

அவர்கள் சுவாசிப்பதற்கென சிறப்புக் கவசங்களை அணிந்திருந்தனர்.

சுமார் 100 குடியிருப்பாளர்கள் புளோக்கிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

தண்ணீர் ஜெட் கொண்டு தீ அணைக்கப்பட்டது.

சம்பவத்தில் யாருக்கும் காயமில்லை. தீ மூண்டது தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்