சிங்கப்பூரில் மேலும் 277 பேருக்கு கொவிட்-19; சமூகத்தில் 5 சம்பவங்கள்

சிங்கப்பூரில் மேலும் 277 பேருக்கு கொவிட்-19; சமூகத்தில் 5 சம்பவங்கள்

1 mins read
fc665427-c61c-42e1-8285-704bdf42bcc4
இன்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் இருவர் வெளிநாட்டிலிருந்து திரும்பிய பின், இங்கு இல்லத் தனிமைப்படுத்தப்பட்டவர்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் இன்று (ஜூலை 24) நண்பகல் நிலவரப்படி புதிதாக 277 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 49,375 ஆகியுள்ளது.

இன்று உறுதி செய்யப்பட்ட கிருமித்தொற்று சம்பவங்களில் 5 உள்ளூர் சமூகத்துடன் தொடர்புடையவை என சுகாதார அமைச்சு தெரிவித்தது. அவர்களில் இருவர் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள்; மற்ற 3 பேர் வேலை அனுமதிச் சீட்டு வைத்திருப்பவர்கள்.

இன்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் இருவர் வெளிநாட்டிலிருந்து திரும்பிய பின், இங்கு இல்லத் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்.

மற்ற சம்பவங்கள் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் தொடர்பிலானவை.

குறிப்புச் சொற்கள்