கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சென்ற இடங்களின் பட்டியலில் புதிய இடங்கள்

கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சென்ற இடங்களின் பட்டியலில் புதிய இடங்கள்

1 mins read
cb55b649-faa5-411d-9b98-686edfd8b6c2
செம்பவாங் சமூக மன்றம், விவோசிட்டியின் சூப் ரெஸ்டரன்ட், ஃபேர்பிரைஸ் எக்ஸ்ட்ரா கடைகள், சாஃப்ரா ஈசூனில் இருக்கும் பின் சி உணவகம், பேங்க் ஆஃப் சைனாவின்  ஜூரோங் ஈஸ்ட் கிளை போன்றவையும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. படம்: LIANHE ZAOBAO, DESMOND WEE, DESMOND FOO -

விவோசிட்டியின் கோல்டன் வில்லேஜ் திரையரங்கு, ராபிள்ஸ் சிட்டி கடைத்தொகுதியின் ராபிள்ஸ் சிட்டி மார்க்கெட் பிளேஸ், கோல்டன் மைல் காம்ப்ளெக்சில் உள்ள டியாண்டின் லெலுக் தாய் உணவகம் போன்ற இடங்களுக்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் (கிருமித்தொற்றைப் பரப்பும் நிலையில் இருந்தவர்கள்) சென்று வந்ததாக சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

செம்பவாங் சமூக மன்றம், விவோசிட்டியின் சூப் ரெஸ்டரன்ட், ஃபேர்பிரைஸ் எக்ஸ்ட்ரா கடைகள், சாஃப்ரா ஈசூனில் இருக்கும் பின் சி உணவகம், பேங்க் ஆஃப் சைனாவின் ஜூரோங் ஈஸ்ட் கிளை போன்றவையும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

கொவிட்-19ஆல் பாதிக்கப்பட்டவர்கள் 30 நிமிடங்களுக்கு மேலாக இருந்த இடங்கள், நேரம் பற்றிய விவரங்களை சுகாதார அமைச்சு அதன் இணையப்பக்கத்தில் வெளியிட்டு வருகிறது. அந்த இடங்களுக்கு, குறிப்பிட்ட நேரங்களில் சென்றவர்கள் தங்களது உடல் நலனைக் கண்காணிப்பதுடன், உடல் நலக் குறைவு ஏற்பட்டால் உடனடியாக, மருத்துவரின் உதவியை நாடவேண்டும். ஆனால், அந்த இடங்களைத் தவிர்க்க வேண்டியதில்லை.

முழுமையான பட்டியலை சுகாதார அமைச்சின் இணையப்பக்கத்தில் காணலாம்.

குறிப்புச் சொற்கள்