இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த ஐவருக்கு கொவிட்-19

இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த ஐவருக்கு கொவிட்-19

1 mins read
314386ee-0c8e-4d77-a340-5875363a784f
341 சம்பவங்கள் ஊழியர் தங்கும் விடுதிவாசிகள் தொடர்பானவை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

இந்தியாவிலிருந்து இம்மாதம் 11, 12 தேதிகளில் சிங்கப்பூருக்குத் திரும்பிய பின், இங்கு தனிமைப்படுத்தப்பட்டவர்களில் ஐவருக்கு நேற்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்த ஐவருக்கும் கிருமித்தொற்று அறிகுறிகள் இல்லை.

அவர்களில் இருவர் 12 வயதான சிறுவன், சிறுமி. மற்ற இருவர் வேலை அனுமதிச்சீட்டு வைத்திருப்பவர்கள்; இன்னொருவர், வேலை அனுமதிச்சீட்டு வைத்திருப்பவரைச் சார்ந்தவர்.

எஞ்சிய 341 சம்பவங்கள் ஊழியர் தங்கும் விடுதிவாசிகள் தொடர்பானவை.

நேற்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட 354 பேரில் உள்ளூர் சமூகத்தில் 8 சம்பவங்கள் மட்டுமே. எண்மரில் நால்வர் சிங்கப்பூரர்கள், 4 பேர் வேலை அனுமதிச்சீட்டு வைத்திருப்பவர்கள்.

உள்ளூர் சமூகத்தில் தினசரி சராசரி புதிய கிருமித்தொற்று எண்ணிக்கை கடந்த வாரத்தில் 9ஆக குறைந்திருக்கிறது. அதற்கு முந்தைய வாரத்தில் இந்த எண்ணிக்கை 12 ஆக இருந்தது.

ஆனால், ஏற்கெனவே அறியப்பட்ட கிருமித்தொற்று குழுமங்களுடன் தொடர்பில்லாத புதிய சம்பவங்களின் கடந்த வார தினசரி சராசரி 5ஆக குறைந்துள்ளது. அதற்கு முந்தைய வாரத்தில் அந்த எண்ணிக்கை 7 ஆக இருந்தது.

இதுவரை கொரோனா கிருமித்தொற்றால் 27 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாக கொவிட்-19 தொடர்பில் தீவிர சிகிச்சைப் பிரிவில் யாரும் சிகிச்சை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்