கொவிட்-19 தொற்றியவர்கள் சென்ற இடங்களின் பட்டியலில் ஸ்ரீ முருகன் விலாஸ் உணவகம், நார்த்பாயின்ட் கடைத்தொகுதி...

1 mins read
0bbc7e2c-c673-4b69-a7da-bb825ea99ca9
ஜூரோங் வெஸ்டில் இருக்கும் அசியாக்கிரின் பள்ளிவாசல், நார்த்பாயின்ட் சிட்டியில் இருக்கும் டிங் டான் ஃபங், குவீன்ஸ்வே ‌ஷாப்பிங் சென்டர் ஆகிய இடங்களும் அந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளன. படங்கள்: SCREENGRAB FROM GOOGLE MAPS -

எண் 50 கிளைவ் ஸ்திரீட்டில் இருக்கும் ஸ்ரீ முருகன் விலாஸ் உணவகம், கம்போங் அட்மிரல்டியில் உள்ள உணவுக்கடைத் தொகுதி மற்றும் ஃபேர்பிரைஸ் பேரங்காடி, ஸொங்ஷான் பூங்காவில் உள்ள ரமடா போன்ற இடங்களுக்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் (கிருமித்தொற்றைப் பரப்பும் நிலையில் இருந்தவர்கள்) சென்று வந்ததாக சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

ஜூரோங் வெஸ்டில் இருக்கும் அசியாக்கிரின் பள்ளிவாசல், நார்த்பாயின்ட் சிட்டியில் இருக்கும் டிங் டான் ஃபங், குவீன்ஸ்வே ‌ஷாப்பிங் சென்டர் ஆகிய இடங்களும் அந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளன.

கொவிட்-19ஆல் பாதிக்கப்பட்டவர்கள் 30 நிமிடங்களுக்கு மேலாக இருந்த இடங்கள், நேரம் பற்றிய விவரங்களை சுகாதார அமைச்சு அதன் இணையப்பக்கத்தில் வெளியிட்டு வருகிறது. அந்த இடங்களுக்கு, குறிப்பிட்ட நேரங்களில் சென்றவர்கள் தங்களது உடல் நலனைக் கண்காணிப்பதுடன், உடல் நலக் குறைவு ஏற்பட்டால் உடனடியாக, மருத்துவரின் உதவியை நாடவேண்டும். ஆனால், அந்த இடங்களைத் தவிர்க்க வேண்டியதில்லை.

முழுமையான பட்டியலை சுகாதார அமைச்சின் இணையப்பக்கத்தில் காணலாம்.

குறிப்புச் சொற்கள்