சிங்கப்பூரின் குழந்தை பிறப்பு விதிகம் கடந்த ஆண்டு அதிகரித்ததாக பிறப்பு, இறப்பு பதிவகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு 39,279 குழந்தைகள் பிறந்ததாக அது கூறியது. இது 2018ஆம் ஆண்டைக் காட்டிலும் 0.6 விழுக்காடு அதிகம்.
அண்மைய காலமாக சிங்கப்பூரின் குழந்தை பிறப்பு விகிதம் தொடந்து சரிந்துகொண்டிருந்தது.
2010ஆம் ஆண்டுக்குப் பிறகு, சிங்கப்பூரின் பிறப்பு விகிதம் 2018ஆம் ஆண்டில் பெரும் சரிவைக் கண்டது.
இந்நிலையில், கடந்த ஆண்டு பிறப்பு விகிதம் சற்று உயர்ந்தது.
சிங்கப்பூரில் முதல்முறையாக தாய்மை அடையும் பெண்களின் சராசரி வயது கடந்த ஆண்டு 30.8ஆகப் பதிவானது.
2018ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் முதல்முறையாக தாய்மை அடையும் பெண்களின் சராசரி வயது இதைவிட சற்று குறைவாக 30.6 வயதாக இருந்தது.
ஒப்புநோக்க, 2009ஆம் ஆண்டில் முதல்முறையாக தாய்மை அடையும் பெண்களின் சராசரி வயது 29.7 வயதாக இருந்தது.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், சிங்கப்பூரின் மரண விகிதம் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2018ஆம் ஆண்டில் 21,282 பேர் மரணம் அடைந்தனர்.
இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு 0.8 விழுக்காடு அதிகரித்து 21,446ஆக பதிவானதாக
குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் தெரிவித்துள்ளது.
மூப்படையும் சமுதாயம் காரணமாக 2010ஆம் ஆண்டிலிருந்து மரண எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டது. 2010ஆம் ஆண்டில் 17,610 பேர் இறந்ததாக தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு சிங்கப்பூரில் பெண்களைவிட அதிக ஆண்கள் இறந்தனர். மரணமடைந்த ஆண்களில் பலர் இதய நோய், உயர் ரத்த உழுத்தம், விபத்துகள் ஆகியவற்றின் காரணமாக இறந்தனர்.

