விடுதிகளில் வசிக்கும் ஊழியர்களின் எண்ணிக்கை குறைந்தது; தனிமைப்படுத்தப்பட்ட விடுதிகளின் எண்ணிக்கையும் குறைந்தது

ஊழியர் தங்கும் விடுதிகளில் தற்போது தங்கியிருப்போரின் அளவு முன்பிருந்ததைவிட சுமார் 25% வரை குறைக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதத்தில் 212,000 பேர் தங்கியிருந்த விடுதிகளில் தற்போது 160,000 பேர் மட்டுமே தங்கியிருப்பதாக மனிதவள, தேசிய வளர்ச்சி அமைச்சுகள் குறிப்பிட்டன.

கடந்த சில மாதங்களில், அந்த விடுதிகளில் தங்கியிருந்த சிலர் அரசாங்க தற்காலிக இடங்கள் அல்லது புதிய தற்காலிக குடியிருப்புப் பகுதிகளுக்கு மாற்றப்பட்டதாக, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்வி ஒன்றுக்கு இணைந்து பதிலளித்த இந்த அமைச்சுகள் தெரிவித்தன.

மேலும் ஜூலை 19 நிலவரப்படி, 22 விடுதிகளைச் சேர்ந்த 105 புளோக்குகள் மட்டுமே தனிமைப்படுத்தப்பட்டவையாக இருப்பதாகவும், 14 விடுதிகளைச் சேர்ந்த 71 புளோக்குகள் தனிமைப்படுத்தலிலிருந்து விலக்கப்பட்டிருப்பதாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டது.

இதன்படி, முன்பு தனிமைப்படுத்தப்பட்டிருந்த 25 விடுதிகளைச் சேர்ந்த 176 புளோக்குகளில் 40% தனிமைப்படுத்தலிலிருந்து விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளன.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் ஊழியர்களின் நடமாட்டம் விடுதிக்குள்ளும் வெளியிடங்களிலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளும் நடப்பில் உள்ளன.

கொவிட்-19லிருந்து விடுபட்டவர்கள் அல்லது பரிசோதனையில் கொவிட்-19 இல்லை என உறுதிப்படுத்தப்பட்டவர்கள் மட்டுமே தனிமைப்படுத்தலிலிருந்து விலக்கிக்கொள்ளப்பட்ட விடுதிகளில் வசிக்கின்றனர். தனிமைப்படுத்தப்பட்டுள்ள விடுதிகளில் வசிப்போருடன் இவர்கள் நேரடியாகத் தொடர்பு கொள்ள இயலாது.

அத்துடன், தேர்ந்தெடுக்கப்பட்ட புளோக்குகளில் வசிப்போர் மட்டுமே பணிக்குத் திரும்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

ஊழியர் தங்கும் விடுதிகளில் 17 புளோக்குகள் மட்டுமே தனிமைப்படுத்தப்படுவோருக்காக ஒதுக்கப்படும் என கொவிட்-19ஐ கையாளும் அமைச்சுகள்நிலை பணிக்குழுவின் தலைவர்களுள் ஒருவரான கல்வி அமைச்சர் லாரன்ஸ் வோங், கடந்த சனிக்கிழமை தெரிவித்திருந்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!