ஊதியத்தில் பாதியை கட்சி, குடியிருப்பாளர்கள், அறக்கொடைக்காக ஒதுக்க விழையும் எதிர்க்கட்சித் தலைவர் பிரித்தம்

ஊதியத்தில் பாதியை கட்சி, குடியிருப்பாளர்கள், அறக்கொடைக்காக ஒதுக்க விழையும் எதிர்க்கட்சித் தலைவர் பிரித்தம்

1 mins read
9fd44011-bdd2-4293-9f8b-68f7ad4309ec
தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்படும் படியைவிட இரட்டிப்பான தொகை எதிர்க்கட்சித் தலைவரான திரு சிங்குக்கு வழங்கப்படும். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரின் எதிர்க்கட்சித் தலைவராக தாம் பெறும் ஊதியத்தில் பாதியை (வரிக்கழிவுக்குப் பிறகு) தமது கட்சி, தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதிவாசிகளுக்கான திட்டங்கள், அறக்கொடை போன்றவற்றுக்காக ஒதுக்க இருப்பதாக பாட்டாளிக் கட்சித் தலைவர் பிரித்தம் சிங் நேற்று (ஜூலை 28) தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவரான திரு சிங்குக்கு வழங்கப்படவுள்ள சலுகைகள், அவரது பணிகள் போன்றவை பற்றி அரசாங்கம் அறிவித்த பிறகு, தமது ஃபேஸ்புக் பக்கத்தில் இட்ட பதிவில், தமது ஊதியத்தில் ஒரு பகுதியை நல்ல காரணங்களுக்காக ஒதுக்க வேண்டுமென தாமும் தம் மனைவியும் மிகவும் வலுவாகக் கருதுவதாகக் குறிப்பிட்டிருந்தார் அவர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்படும் படியைவிட இரட்டிப்பான தொகை எதிர்க்கட்சித் தலைவரான திரு சிங்குக்கு வழங்கப்படும். அவரது ஆண்டு ஊதியத் தொகுப்பு $385,000.

குறிப்புச் சொற்கள்