சிங்கப்பூரில் மேலும் 334 பேருக்கு கொவிட்-19

சிங்கப்பூரில் மேலும் 334 பேருக்கு கொவிட்-19

1 mins read
0063efe4-9c83-4f4b-b4bc-4201e418279c
இன்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் நால்வர் வெளிநாடுகளிலிருந்து திரும்பிய பின், இங்கு இல்லத் தனிமைப்படுத்தப்பட்டவர்கள். -

சிங்கப்பூரில் இன்று (ஜூலை 29) நண்பகல் நிலவரப்படி புதிதாக 334 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 51,531 ஆகியுள்ளது.

இன்று உறுதி செய்யப்பட்ட கிருமித்தொற்று சம்பவங்களில் 3 உள்ளூர் சமூகத்துடன் தொடர்புடையவை என சுகாதார அமைச்சு தெரிவித்தது. அவர்களில் இருவர் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள், ஒருவர் வேலை அனுமதிச் சீட்டு வைத்திருப்பவர்.

இன்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் நால்வர் வெளிநாடுகளிலிருந்து திரும்பிய பின், இங்கு இல்லத் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்.

மற்ற சம்பவங்கள் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் தொடர்பிலானவை.

குறிப்புச் சொற்கள்