சிங்கப்பூரில் மேலும் 307 பேருக்கு தொற்று; சமூக அளவில் ஒரு சம்பவம்

சிங்கப்பூரில் மேலும் 307 பேருக்கு தொற்று; சமூக அளவில் ஒரு சம்பவம்

1 mins read
237bff5c-eae4-4a4b-ae0d-c6aa2fc181c3
இன்று உறுதி செய்யப்பட்ட கிருமித்தொற்று சம்பவங்களில் 1 உள்ளூர் சமூகத்துடன் தொடர்புடையது என சுகாதார அமைச்சு தெரிவித்தது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் இன்று (ஆகஸ்ட் 1) நண்பகல் நிலவரப்படி புதிதாக 307 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 52,512 ஆகியுள்ளது.

இன்று உறுதி செய்யப்பட்ட கிருமித்தொற்று சம்பவங்களில் 1 உள்ளூர் சமூகத்துடன் தொடர்புடையது என சுகாதார அமைச்சு தெரிவித்தது.

இன்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் ஐவர் வெளிநாடுகளிலிருந்து திரும்பிய பின், இங்கு இல்லத் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்.

மற்ற சம்பவங்கள் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் தொடர்பிலானவை.

குறிப்புச் சொற்கள்