சிங்கப்பூரில் புதிதாக 313 பேருக்கு கொவிட்-19; ஐவர் வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்கள்

சிங்கப்பூரில் இன்று (ஆகஸ்ட் 2) நண்பகல் நிலவரப்படி புதிதாக 313 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 52,825 ஆகியுள்ளது.

இன்று உறுதி செய்யப்பட்ட கிருமித்தொற்று சம்பவங்களில் 1 உள்ளூர் சமூகத்துடன் தொடர்புடையது என்றும் அவர் நிரந்தரவாசி எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்தது. 

இன்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் ஐவர் வெளிநாடுகளிலிருந்து திரும்பிய பின், இங்கு இல்லத் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்.

மற்ற சம்பவங்கள் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் தொடர்பிலானவை.