சிங்கப்பூரில் மேலும் 295 பேருக்கு கொவிட்-19; சமூகத்தில் 2 சம்பவங்கள்

சிங்கப்பூரில் மேலும் 295 பேருக்கு கொவிட்-19; சமூகத்தில் 2 சம்பவங்கள்

1 mins read
1b037253-4166-498d-b506-5a4be576c6d6
-

சிங்கப்பூரில் இன்று (ஆகஸ்ட் 4) நண்பகல் நிலவரப்படி புதிதாக 295 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 53,346 ஆகியுள்ளது.

இன்று உறுதி செய்யப்பட்ட கிருமித்தொற்று சம்பவங்களில் 2 உள்ளூர் சமூகத்துடன் தொடர்புடையவை என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது. அவர்களில் ஒருவர் சிங்கப்பூரர், மற்றவர் வேலை அனுமதிச் சீட்டு வைத்திருப்பவர். இன்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 7 பேர் வெளிநாடுகளிலிருந்து திரும்பிய பின், இங்கு இல்லத் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்.

மற்ற சம்பவங்கள் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் தொடர்பிலானவை.

குறிப்புச் சொற்கள்