சிங்கப்பூரில் நேற்று (ஆகஸ்ட் 17) நண்பகல் வரை உறுதி செய்யப்பட்ட 91 கொவிட்-19 சம்பவங்களில், வெளிநாடுகளிலிருந்து திரும்பி, இல்லத் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 6 பேர் என்ற தகவலை சுகாதார அமைச்சு தெரிவித்தது.
அவர்களில் இருவர் இந்தியாவிலிருந்து வந்த சிங்கப்பூரர்கள். மற்றொரு நிரந்தரவாசியும் இந்தியாவிலிருந்து வந்தவர்.
அமெரிக்காவிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த 27 வயது அமெரிக்கர், வேலை அனுமதிச் சீட்டுடன் இங்கு பணிபுரிபவர்.
மற்ற இருவரில் ஒருவர் இந்தியாவிலிருந்து வந்தவர்; மற்றவர் இந்தோனீசியாவிலிருந்து வந்தவர். இருவரும் வேலை அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள்.
நேற்று உள்ளூர் சமூகத்தில் யாருக்கும் கிருமித்தொற்று உறுதி செய்யப்படவில்லை.
விடுதிகளில் தங்கியுள்ள 85 வெளிநாட்டு ஊழியர்களுக்கும் நேற்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது. உள்ளூர் சமூகத்தில் தினசரி சராசரி புதிய கிருமித்தொற்று எண்ணிக்கை கடந்த வாரங்களாக தொடர்ந்து 2 ஆக உள்ளது.
ஆனால், ஏற்கெனவே அறியப்பட்ட கிருமித்தொற்று குழுமங்களுடன் தொடர்பில்லாத புதிய சம்பவங்களின் கடந்த இரு வாரங்களின் தினசரி சராசரி 1 ஆக உள்ளது.
இதுவரை கொரோனா கிருமித்தொற்றால் 27 பேர் உயிரிழந்தனர்.
தொடர்புடைய செய்திகள்
அனைத்துலக அளவில் 22 மில்லியனுக்கும் அதிகமானோர் கொவிட்-19ஆல் பாதிக்கப்பட்டனர்; இதுவரை 776,000க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

