சிங்கப்பூரில் கொவிட்-19 பாதிப்பு எண்ணிக்கை 56,000ஐ கடந்தது

சிங்கப்பூரில் கொவிட்-19 பாதிப்பு எண்ணிக்கை 56,000ஐ கடந்தது

1 mins read
90675238-e52b-4a39-8f24-96529cf3bc9c
இன்று உறுதி செய்யப்பட்ட கிருமித்தொற்று சம்பவங்களில் 2 உள்ளூர் சமூகத்துடன் தொடர்புடையவை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் இன்று (ஆகஸ்ட் 19) நண்பகல் நிலவரப்படி புதிதாக 93 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 56,031 ஆகியுள்ளது.

இன்று உறுதி செய்யப்பட்ட கிருமித்தொற்று சம்பவங்களில் 2 உள்ளூர் சமூகத்துடன் தொடர்புடையவை. அவர்கள் இருவரும் வேலை அனுமதிச் சீட்டு வைத்திருப்பவர்கள் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.

இன்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் அறுவர் வெளிநாடுகளிலிருந்து திரும்பிய பின், இங்கு இல்லத் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்.

மற்ற சம்பவங்கள் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் தொடர்பிலானவை.

குறிப்புச் சொற்கள்