சிங்கப்பூரில் இன்று (ஆகஸ்ட் 22) நண்பகல் நிலவரப்படி புதிதாக 50 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 56,266 ஆகியுள்ளது.
இன்று உறுதி செய்யப்பட்ட கிருமித்தொற்று சம்பவங்களில் 2 உள்ளூர் சமூகத்துடன் தொடர்புடையவை. அவர்கள் இருவரும் சிங்கப்பூரர்கள் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.
இன்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் ஐவர் வெளிநாடுகளிலிருந்து திரும்பிய பின், இங்கு தனிமைப்படுத்தப்பட்டவர்கள்.

