கிருமித்தொற்று கண்டவர்கள் சென்ற இடங்களின் பட்டியலில் லிட்டில் இந்தியா கடைகள்

கிருமித்தொற்று கண்டவர்கள் சென்ற இடங்களின் பட்டியலில் லிட்டில் இந்தியா கடைகள்

1 mins read
e3b39389-3575-4f94-8b6d-65c3785ae54e
கிருமித்தொற்று கண்டவர்கள் சென்ற இடங்களின் பட்டியலில் லிட்டில் இந்தியா கடைகள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

லிட்டில் இந்தியாவின் டன்லப் ஸ்திரீட்டில் உள்ள ஹனிஃபா, டன்லப் ஸ்திரீட்டில் உள்ள கன்ட்ரிசைட் கஃபே, ஆல் இந்தியா சூப்பர் மார்ட், கெக் போ கடைத்தொகுதி, பொங்கோலில் உள்ள அஜார்ஜஸ் பை த பே, சிராங்கூனில் உள்ள அர்தெஸ்டம் ஜுவல்லரி, தெம்பனிஸ் மால், வெஸ்ட் மாலில் உள்ள கோல்டு ஸ்டோரேஜ், செஞ்சுரி ஸ்குவேரில் உள்ள 'தி ஃபூட் மார்க்கெட் பை ஃபூட் ஜங்ஷன்' போன்ற இடங்களுக்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் (கிருமித்தொற்றைப் பரப்பும் நிலையில் இருந்தவர்கள்) சென்று வந்ததாக சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

கொவிட்-19ஆல் பாதிக்கப்பட்டவர்கள் 30 நிமிடங்களுக்கு மேலாக இருந்த இடங்கள், நேரம் பற்றிய விவரங்களை சுகாதார அமைச்சு அதன் இணையப்பக்கத்தில் வெளியிட்டு வருகிறது. அந்த இடங்களுக்கு, குறிப்பிட்ட நேரங்களில் சென்றவர்கள் தங்களது உடல் நலனைக் கண்காணிப்பதுடன், உடல் நலக் குறைவு ஏற்பட்டால் உடனடியாக, மருத்துவரின் உதவியை நாடவேண்டும். ஆனால், அந்த இடங்களைத் தவிர்க்க வேண்டியதில்லை.

முழுமையான பட்டியலை சுகாதார அமைச்சின் இணையப்பக்கத்தில் காணலாம்.

குறிப்புச் சொற்கள்