சாங்கி கடற்கரைப் பூங்காவுக்கு அருகில் கடலிலிருந்து 14 வயது சிறுவனின் சடலம் மீட்பு

1 mins read
f76f3732-7063-4a0f-a44d-2c2decb11039
கரையிலிருந்து சுமார் 15 மீட்டர் தொலைவில் சடலம் ஒன்று மீட்கப்பட்டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சாங்கி கடற்கரைப் பூங்காவுக்கு அருகில் கடலிலிருந்து 14 வயதுச் சிறுவனின் சடலத்தை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் இன்று மீட்டனர்.

கடல் நீரிலிருந்து மீட்க உதவி கோரி சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கு இன்று பிற்பகல் 3.30 மணியளவில் அழைப்பு விடுக்கப்பட்டது.

அதிகாரிகள் சம்பவ இடத்தை அடைந்தபோது அங்கு கரையில் ஒருவரைக் கண்டனர். ஆனால், இரண்டாம் நபர் இருந்ததற்கான அறிகுறி ஏதுமில்லை.

அதனையடுத்து, முதல் நபர் சாங்கி பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது அவர் சுயநினைவுடன் இருந்தாரா என்பது தெரியவில்லை.

பேரிடர் உதவி மற்றும் மீட்புக் குழுவைச் சேர்ந்த முக்குளிப்பாளர்கள் நீருக்கடியில் இரண்டாம் நபரைத் தேடும் பணியில் இறங்கினர்.

கரையிலிருந்து சுமார் 15 மீட்டர் தொலைவில் சடலம் ஒன்றை அவர்கள் மீட்டனர்.

அவர் இறந்துபோனதாக, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் துணை மருத்துவ அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே உறுதிப்படுத்தினர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்