சிங்கப்பூரில் மேலும் 87 பேருக்கு தொற்று; வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்கள் 13 பேர்

சிங்கப்பூரில் மேலும் 87 பேருக்கு தொற்று; வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்கள் 13 பேர்

1 mins read
d5c270e5-4e6f-4387-b3ad-2c50a9bc17e2
இன்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 13 பேர் வெளிநாடுகளிலிருந்து திரும்பிய பின், இங்கு தனிமைப்படுத்தப்பட்டவர்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் இன்று (ஆகஸ்ட் 23) நண்பகல் நிலவரப்படி புதிதாக 87 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 56,353 ஆகியுள்ளது.

இன்று உறுதி செய்யப்பட்ட கிருமித்தொற்று சம்பவங்களில் ஒன்று உள்ளூர் சமூகத்துடன் தொடர்புடையது. வேலை அனுமதிச் சீட்டுடன் இங்கு பணிபுரிபவர் அவர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.

இன்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 13 பேர் வெளிநாடுகளிலிருந்து திரும்பிய பின், இங்கு தனிமைப்படுத்தப்பட்டவர்கள்.

குறிப்புச் சொற்கள்