சிங்கப்பூரில் மேலும் 31 பேருக்கு கொவிட்-19

சிங்கப்பூரில் மேலும் 31 பேருக்கு கொவிட்-19

1 mins read
b84841a0-4c34-4ab5-97f5-146efcb1e065
இன்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் ஒருவர் வெளிநாட்டிலிருந்து திரும்பிய பின், இங்கு தனிமைப்படுத்தப்பட்டவர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் இன்று (ஆகஸ்ட் 25) நண்பகல் நிலவரப்படி புதிதாக 31 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 56,435 ஆகியுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 22ஆம் தேதிக்குப் பிறகு, ஆகக் குறைவான கிருமித்தொற்று சம்பவங்கள் இன்று பதிவாகியுள்ளன. மார்ச் 22 அன்று 23 சம்பவங்கள் பதிவானது குறிப்பிடத்தக்கது.

இன்று உள்ளூர் சமூகத்தில் கிருமித்தொற்று எதுவும் பதிவாகவில்லை என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.

இன்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் ஒருவர் வெளிநாட்டிலிருந்து திரும்பிய பின், இங்கு தனிமைப்படுத்தப்பட்டவர்.

குறிப்புச் சொற்கள்