சிங்கப்பூரில் மேலும் 77 பேருக்கு கொவிட்-19

சிங்கப்பூரில் மேலும் 77 பேருக்கு கொவிட்-19

1 mins read
e2f86d0e-dae9-4db7-b893-3bf6cca69588
இன்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் ஐவர் வெளிநாட்டிலிருந்து திரும்பிய பின், இங்கு தனிமைப்படுத்தப்பட்டவர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் இன்று (ஆகஸ்ட் 27) நண்பகல் நிலவரப்படி புதிதாக 77பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 56,572 ஆகியுள்ளது.

இன்று உள்ளூர் சமூகத்தில் இருவருக்கு கிருமித்தொற்று கண்டுபிடிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. அவர்கள் இருவரும் சிங்கப்பூரர்கள் என்று அமைச்சின் முதற்கட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

இன்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் ஐவர் வெளிநாட்டிலிருந்து திரும்பிய பின், இங்கு தனிமைப்படுத்தப்பட்டவர்கள்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்