கடுமையாக பாதிக்கப்பட்ட புற்றுநோயாளி மீது நீதிமன்றம் கருணை: சிறைக்கு பதில் அபராதம்

கடுமையாக பாதிக்கப்பட்ட புற்றுநோயாளி மீது நீதிமன்றம் கருணை: சிறைக்கு பதில் அபராதம்

1 mins read
38374f83-6538-4882-8e89-e580b8587511
நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரால் சிறைத் தண்டனையை நிறைவேற்ற முடியாது என்று சிறைச்சாலை மருத்துவ அதிகாரிகளும் தெரிவித்தனர். ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப்படம் -

நான்காம் நிலை மார்பகப் புற்றுநோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட ஒரு மாது, சக்கர நாற்காலியில் நடமாட வேண்டிய சூழ்நிலை.

அத்துடன் அவரது எடை வெறும் 30 கிலோ மட்டுமே.

விவாகரத்து தொடர்பிலான நடவடிக்கைகளில் பிள்ளைகளை ஈடுபடுத்த வேண்டாம் எனக் குறிப்பிட்டு நீதிமன்றம் விதித்த உத்தரவுகளை அவர் மீறியிருந்தார்.

அதற்காக அவருக்கு ஒரு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இருப்பினும், தண்டனைக்கு எதிராக மாது மேல்முறையீடு செய்ததில் சிறைக்குச் செல்வதற்குப் பதிலாக அவருக்கு $5,000 அபராதம் விதிக்கப்பட்டது.

நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரால் சிறைத் தண்டனையை நிறைவேற்ற முடியாது என்று சிறைச்சாலை மருத்துவ அதிகாரிகளும் தெரிவித்தனர்.

இதுபோன்ற சூழலில் கருணை காட்டி நீதிமன்றம் இம்முடிவை எடுத்தது.

குறிப்புச் சொற்கள்