அக்டோபர் முதல் கட்டாய கேர்ஷீல்டு லைஃப் காப்புறுதித் திட்டம்

நீண்டகாலப் பராமரிப்பு தேவைப்படக்கூடிய கடுமையான உடற்குறை ஏற்பட்டால், வாழ்நாள் முழுக்க மாதந்தோறும் குறைந்தபட்சம் $600 வழங்க வழிவகை செய்யும் ‘கேர்ஷீல்டு லைஃப்’ திட்டம் வரும் அக்டோபர் முதல் தேதியிலிருந்து செயல்பாட்டுக்கு வரும்.

1980 அல்லது அதற்குப் பிறகு பிறந்த, அதாவது 40 அல்லது அதற்குக் குறைந்த வயதுடைய குடியிருப்பாளார்களுக்கு இந்தத் திட்டம் கட்டாயமாக்கப்படுகிறது.

இந்தத் திட்டத்துக்கான வருடாந்திர சந்தாவை மெடிசேவ் கணக்கிலிருந்து தங்களுடைய 30வது பிறந்தநாள் முதல் 67வது வயதுவரை, அதாவது மொத்தம் 38 சந்தா கட்டணத்தைச் செலுத்துவர்.

சந்தா செலுத்துவது நிறுத்தப்பட்டாலும், அதற்குப் பிறகான தங்களது வாழ்நாள் வரையிலும் இந்தத் திட்டம் காப்புறுதியை வழங்கும்.

30 முதல் 40 வயதுக்குட்பட்ட அனைவரும் அக்டோபர் முதல் தேதியிலிருந்து சந்தா கட்டணம் செலுத்துவதுடன், அவர்கள் தேசிய நீண்டகால காப்புறுதித் திட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்படுவர்.

போதுமான அளவுக்கு மெடிசேவ் கணக்கில் பணம் இல்லாதவர்களுக்கு அவர்களது குடும்ப உறுப்பினர்களின் (அங்கீகாரம் பெற்று) கணக்கிலிருந்து செலுத்தலாம். அரசாங்க மானியமும் உண்டு.

குறைந்த, நடுத்தர வருமானக் குடியிருப்பாளர்களின் சந்தா கட்டணத்தில் 30% வரை கழிவு உண்டு. மூன்றில் இரண்டு பங்கு குடியிருப்பாளர்கள் இந்த வகையில் பயன்பெறுவர்.

சந்தாவின் தொடர்பில் கூடுதல் உதவி தேவைப்படுவோர் அரசாங்கத்தின் ஆதரவை நாடலாம்.

இந்தத் திட்டத்தின் முதல் ஐந்தாண்டுகளில் சேருவோருக்கு $250 வரையிலான உருமாற்ற கழிவும் வழங்கப்படும்.

கடுமையான உடற்குறை ஏற்படும்பட்சத்தில் 67 வயதுக்குட்பட்டவராக இருந்தாலும் அவர் எஞ்சிய காலத்துக்கு சந்தா செலுத்தத் தேவையில்லை.

30 வயதிலேயே கடுமையான உடற்குறை உடையவராக இருந்தாலும், முதல் தவணைக் கட்டணத்தை மட்டும் செலுத்த வேண்டியிருக்கும். அதன் மூலம் இந்தத் திட்டத்தில் சேர்ந்து, வாழ்நாள் முழுவதும் பலன் பெற முடியும்.

இந்தத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் தொகை இந்த ஆண்டில் $600 என நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், எதிர்காலத்தில் அதிகரிக்கும் செலவினங்களைக் கருத்தில் கொண்டு அந்தத் தொகை அதிகரிக்கப்படும்.

முதல் ஐந்தாண்டுகளில் சந்தா மற்றும் வழங்குதொகை, ஆண்டுக்கு 2% வரை உயரும்.

இந்தத் திட்டத்தின் தொடக்க ஆண்டில் 30 வயதினருக்கான சந்தா கட்டணம் ஆண், பெண் இருபாலருக்கும் முறையே, $206 மற்றும் $253ஆக இருக்கும். எதிர்காலத்துக்கான சந்தா, வழங்குதொகை பற்றி கேர்ஷீல்டு லைஃப் மன்றம் முடிவு செய்யும்.

ஆனால் ஒருவர் வழங்குதொகை பெறத் தொடங்கிவிட்டால், மாதந்தோறும் அதே தொகைதான் வழங்கப்படும். அதேபோல, ஒருவர் கடைசி சந்தா கட்டணம் செலுத்தும் ஆண்டின் வழங்குதொகைதான், அவர் அந்தப் பணத்தைப் பெறத் தொடங்கும் தேவை ஏற்படும்போது வழங்கப்படும்.

உண்பது, உடுத்துவது, கழிவறையைப் பயன்படுத்துவது, குளியல், நடமாட்டம், இருக்கையிலிருந்து படுக்கைக்கும், படுக்கையிலிருந்து இருக்கைக்கும் நகர்வது போன்ற நடவடிக்கைகளில் ஏதாவது மூன்று நடவடிக்கைகளைத் தாமாகச் செய்ய முடியாத நிலை ஏற்படுவது கடுமையான உடற்குறை என்று கருதப்படுகிறது.

இத்தகைய பாதிப்புக்குள்ளாகும் சிங்கப்பூரர்களின் நீண்டகாலப் பராமரிப்புக்கு இந்த திட்டம் வாழ்நாள் முழுவதும் நிதி ஆதரவு வழங்கும் என்று சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் தெரிவித்தார்.

‘எல்டர்ஷீல்டு’ திட்டத்தில் இணைந்திருப்போர்கள் விரும்பினால் கேர்ஷீல்டு லைஃப் திட்டத்தில் சேர முடியும். அது குறித்த தகவல்கள் அடுத்த ஆண்டு வெளியிடப்படும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!