சிங்கப்பூரில் பாக்டீரியா தொற்று இருமடங்காக அதிகரிப்பு; புலன்விசாரணை தொடங்கியது

சிங்கப்பூரில் பாக்டீரியா தொற்று இருமடங்காக அதிகரிப்பு; புலன்விசாரணை தொடங்கியது

1 mins read
6394e0e2-f612-4405-81b4-975bb7e0784c
சமைக்கப்படாத, நன்னீரில் வாழும் மீன் இறைச்சியை நேரடி உணவாக விற்பனை செய்வது கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து தடை செய்யப்பட்டுள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் 'ஜிபிஎஸ்' (GBS) எனப்படும் ஒருவகை பாக்டீரியா கிருமி தொற்றிய 50 பேருக்குச் சென்ற மாதம் சிகிச்சை அளித்ததாக அரசாங்க மருத்துவமனைகள் தெரிவித்தன.

இந்த எண்ணிக்கை, அதற்கு முந்தைய மாதத்தில் 25 பேராக இருந்ததாக மருத்துவர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் சுகாதார அமைச்சு தெரிவித்து இருந்தது; தொடர்ந்து பரிசோதனைகள் நடத்தப்பட்டன.

இப்போது பாக்டீரியா கிருமி தொற்றி இருப்போரில் 18 பேர், இங்கு 2015ல் இதே பாக்டீரியாவால் பாதிக்கப்பட்டவர்களைப்போன்று அதே அறிகுறிகளைக் கொண்டிருந்தனர்.

2015ல் சுமார் 160 பேர் சமைக்கப்படாத, நன்னீரில் வாழும் மீன் இறைச்சியைச் சாப்பிட்டதால் பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், ஜிபிஎஸ் தொற்று இப்போது அதிகமாகி இருப்பது பற்றி சுகாதார அமைச்சும் சிங்கப்பூர் உணவு முகவை அமைப்பும் புலன்விசாரணை நடத்துகின்றன. அண்மையில் இந்த பாக்டீரியா தொற்றுக்கு ஆளானவர்கள் சென்று வந்துள்ள கடைகளுக்குச் சென்று சோதனைகள் நடத்தப்பட்டன.

அந்தக் கடைகளில் எந்த ஒரு கடையும் சமைக்காத மீன் இறைச்சியை விற்கவில்லை என்பது தெரியவந்தது. சென்ற ஆண்டு மே மாதத்திற்கும் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கும் இடையில் வழக்கமாக தான் நடத்தும் பரிசோதனைகளில் ஜிபிஎஸ் பாக்டீரியா கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் இந்த வாரியம் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்