நெக்ஸ் கடைத்தொகுதி திரையரங்கில் காற்றோட்டக் குழாய் விழுந்து இருவர் காயம்

1 mins read
80962a9c-a462-4a50-acf7-7a57251aaaa9
துணை மருத்துவ ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வரும் வரை, திரையரங்கின் ஊழியர்கள், காயம்பட்ட இருவரையும் அசுவாசப்படுத்தினர். காயமடைந்த இருவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

நெக்ஸ் கடைத்தொகுதியில் உள்ள 'ஷா தியேட்டர்ஸ்' திரையரங்கின் கூரையில் இருந்த காற்றோட்டக் குழாய் விழுந்ததில் இருவர் காயமடைந்தனர்; அப்போது திரைப்படம் ஓடிக்கொண்டிருந்ததாகக் கூறப்பட்டது.

அந்தத் திரையரங்கின் ஹால் 6ல் இருந்த காற்றோட்டக் குழாய் இன்று மாலை 4.45 மணியளவில் விழுந்தது.

துணை மருத்துவ ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வரும் வரை, திரையரங்கின் ஊழியர்கள், காயம்பட்ட இருவரையும் அசுவாசப்படுத்தினர். காயமடைந்த இருவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

"காயமடைந்தவர்களுக்கு ஆதரவளிப்பதே எங்களது முன்னுரிமை," என்றார் திரையரங்கின் பேச்சாளர். நில உரிமையாளர், அதிகாரிகளுடன் சேர்ந்து சம்பவம் தொடர்பான விசாரணையை மேற்கொண்டிருப்பதாகவும் கூறப்பட்டது.

மறு அறிவிப்பு வரும் வரை அந்தத் திரையரங்கம் மூடப்படுகிறது.

முன்பதிவுடன் இன்று மாலை திரையரங்குக்குச் சென்றவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். வேறு திரையரங்கில் படம் பார்க்க கூப்பன்கள் வழங்கப்பட்டன.

குறிப்புச் சொற்கள்