துணைப் பிரதமர்: மாற்றங்களைத் தழுவினாலும் நன்னெறிகளை ஒருபோதும் கைவிடக்கூடாது

சிங்கப்பூர் பல மாற்றங்களைத் தழுவிக்கொள்ளும் நிலையிலும் வெற்றிக்கான நன்னெறிகளைக் கைவிட்டுவிடக் கூடாது என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் நாடாளுமன்றத்தில் தெரிவித்து உள்ளார்.

சிங்கப்பூரின் வெற்றிக்கு உதவி வந்திருக்கின்ற நன்னெறிகளைக் கடைப்பிடித்து அதே வேளையில், துணிச்சலோடும் நம்பிக்கையோடும் மாற்றங்களைத் தழுவிக் கொண்டால் சிங்கப்பூர் தொடர்ந்து செழித்தோங்க முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.

கொவிட்-19 காரணமாக உலகளவில் நெருக்கடிகள் ஏற்பட்டு இருந்தாலும் மாற்றங்கள் வேகமடைந்து வந்தாலும் சிங்கப்பூர் அத்தகைய அணுகுமுறையைக் கைகொண்டால் தொடர்ந்து வெற்றி அடைய முடியும் என்றார் அவர்.

புதிய நாடாளுமன்றத்தைத் தொடங்கிவைத்து அதிபர் ஆற்றிய உரை மீதான விவாதம் நேற்று மன்றத்தில் தொடங்கியது.

அதில் கலந்துகொண்டு பேசிய திரு ஹெங், முன்பைவிட வேகமாக பொருளியல் மாற்றமடையும் என்றும் குறிப்பிட்டார். அதனால் வழக்கமாக இருந்து வரும் வேலைகளும் வேலை பாணிகளும் மாறும் என்பதால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் பொதுவானவையாக இருக்கும் என்றார் அவர்.

சிங்கப்பூர் தனது சமூகப் பாதுகாப்புக் கட்டமைப்பை ேமம்படுத்தி ஏற்றத்தாழ்வை அகற்ற தொடர்ந்து போராடி வரும் வேளையில், சிங்கப்பூரர்கள் நாட்டின் நன்னெறிகளிலும் தனி அடையாளத்திலும் ஆழமான தொடர்பைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டு இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

திறந்த நிலை, பல கலாசாரத்தன்மை, சுய உறுதி போன்ற நன்னெறிகள் சிங்கப்பூரை முன்னேற்றி இருக்கின்றன என்று கூறிய அவர், அந்த நன்னெறிகள் தொடர்ந்து முக்கியமானவையாக இருந்து வரும் என்றார்.

இருந்தாலும் சமூகம் முன்பைவிட அதிகமாக பன்மயமாகி வருவதால் இந்த பொது நோக்க உணர்வைக் கட்டிக்காப்பதற்கு அதிக முயற்சிகள் தேவைப்படும் என்றார். “அடையாளம், சமூகப் பொருளியல் நிலை, அரசியல் நம்பிக்கை ஆகியவை தொடர்பில் புதிய வேறுபாடுகள் தலைதூக்கும்.

“இனம், மொழி, சமயம் போன்றவை தொடர்பில் எப்போதுமே வெவ்வேறான கண்ணோட்டங்கள் இருந்து வரும். அதேபோல குடிமக்களின் உரிமைகள், கடமைகள் ஆகியவற்றின் பேரிலும் இத்தகைய நிலவரம் இருக்கும்.

“நம்முடைய வேறுபாடுகளை எல்லாம் பின்தள்ளி மேம்பட்டு பொதுவான நிலையைக் காணுவது முக்கியமானது,” என்றார் அவர்.

சிங்கப்பூர் தனது சமூகப் பாதுகாப்புக் கட்டமைப்பைக் கை கொண்டு ஒவ்வொரு சிங்கப்பூரரின் முன்னேற்றத்தைத் தொடர்ந்து உறுதிப்படுத்தும் என்றார் அவர்.

மக்களிடம் அரசாங்கம் தொடர்ந்து முதலீடு செய்து புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்தும் வகையில் அவர்களைத் திறம்பட பேணி உருவாக்கும் என்றார் அவர்.

மக்கள்தொகை மூப்படைவதால் சமூகச் செலவினம் தொடர்ந்து அதிகரிக்கும் என்றும் திரு ஹெங் குறிப்பிட்டார். நன்கு வடிவமைக்கப்பட்ட சமூகப் பாதுகாப்பு கட்டமைப்பு, எளிதில் பாதிக்கக்கூடிய மக்களைப் பாதுகாக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

விழுந்தவர்கள் மீண்டு எழுவதற்கு உதவும் வழியையும் அது ஏற்படுத்தித் தரும் என்றார் அவர். சிங்கப்பூரர்களுடன் ஆழ்ந்த பங்காளித்துவ உறவை பலப்படுத்துவது என்ற அரசின் கடப்பாட்டை திரு ஹெங் மறுஉறுதிப்படுத்தினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!